முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழக மக்களுக்கு நிச்சயம் நல்ல செய்தி கிடைக்கும்: மத்திய அமைச்சர் அனில் மாதவ் தவே உறுதி

வெள்ளிக்கிழமை, 20 ஜனவரி 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி  - ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழக மக்களுக்கு நிச்சயம் நல்ல செய்தி கிடைக்கும் என்று மத்திய அமைச்சர் அனில் மாதவ்தவே உறுதிபட தெரிவித்துள்ளார்.

உணர்வுகளுக்கு மதிப்பு

ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாக மத்திய சுற்றுச்சூழல் துறை இணை அமைச்சர் அனில் மதாவ் தவே டெல்லியில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழக மக்களின் கலாச்சார உணர்வுகளை பிரதமர் மோடி பாரட்டினார். பல நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்தது ஜல்லிக்கட்டு என்பதை ஏற்கிறோம். தமிழக அரசின் வரைவு சட்டம் இன்று (நேற்று) கிடைத்தது. இன்று (நேற்று) அல்லது நாளை (இன்று) ஜல்லிக்கட்டு பிரச்சினை முடிவுக்கு வரும். தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்கிறோம்.

நிரந்தர தீர்வு
ஜல்லிக்கட்டு விவகாரத்தில் உரிய விதிமுறைகள் பின்பற்றப்படுகிறது. நாளை (இன்று) காலைக்குள் ஜல்லிக்கட்டு தொடர்பாக இறுதி முடிவு அறிவிக்கப்படும். தமிழக மக்களுக்கு நிச்சயம் நல்ல செய்தி கிடைக்கும். பாரம்பரிய உணர்வுகளை மதிக்கும் வகையில் முடிவு இருக்கும். ஜல்லிக்கட்டு விவகாரத்தில் 2011 ல் நடைபெற்ற  தவறு மீண்டும் நடைபெற அனுமதிக்க மாட்டோம்.  உரிய சட்ட விதிகள் பின்பற்றப்படும். ஜல்லிக்கட்டு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண்பதுதான் மத்திய அரசின் விருப்பம்” இவ்வாறு தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்