முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாகை மாவட்டத்தில் புள்ளி இயல் துணை இயக்குநர் அலுவலகத்தில் காவலர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம் : கலெக்டர் பழனிசாமி தகவல்

வெள்ளிக்கிழமை, 20 ஜனவரி 2017      நாகப்பட்டினம்

பொருள் இயல் மற்றும் புள்ளி இயல் துறையின் கீழ் இயங்கும் நாகப்பட்டினம் மாவட்ட புள்ளி இயல் துணை இயக்குநர் அலுவலகத்தில் காலியாக உள்ள ஒரு நிரந்தர முழுநேர காவலர் பணியிடத்திற்கு நேர்காணல் மூலம், இனசுழற்சியின் அடிப்படையில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர்() மற்றும் முன்னுரிமையற்றவர்() மூலம் நிரப்பப்பட உள்ளது. இதற்காக பின்வரும் தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரர்கள் (1) கல்வித் தகுதி-தமிழ் எழுத படிக்கத் தெரிந்திருக்க வேண்டும், (2) வயது வரம்பு:- மிகவும் பிற்படுத்தப்பட்டோர்() 32 வயதிற்குள் இருக் வேண்டும். (மாற்றுத் திறனாளிகள் எனில் கூடுதலாக 10 வருடங்கள்), (3) ஊதிய விகிதம்:- ரூ.4800 - 10000 தர ஊதியம் 1300, (4) விண்ணப்பதாரர் நாகப்பட்டினம் மாவட்டத்தில் வசிப்பவராக இருத்தல் வேண்டும்.

 

காவலர் பணி

 

மேற்படி தகுதிகளுடன் நாகப்பட்டினம் மாவட்டத்தில் புள்ளி இயல் துணை இயக்குநர் அலுவலகத்தில் நிரந்தர முழுநேர காவலராகப் பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் (1) பெயர், (2) தகப்பனார் பெயர், (3) பாலினம், (4) பிறந்த தேதி, (5) அஞசல் முகவரி(அஞ்சல் குறியீட்டு எண்ணுடன்), (6) கல்வித் தகுதி, (7) சாதி, (8) வேலைவாய்ப்பு பதிவு விவரம்(இருப்பின்),(9) குடும்ப அட்டை எண், (10) பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஒன்ற ஆகிய விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன், வரிசை எண் 4 முதல் 9 வரை உள்ள ஆவணங்களின் நகல்களில் சான்றொப்பம் செய்து புள்ளி இஙல் துணை இயக்குநர், மாவட்ட புள்ளியியல் அலுவலகம், 3-வது தளம், மாவட்ட கலெக்டர் அலுவலகம், நாகப்பட்டினம் என்றஎ முகவரிக்கு 06.02.2017 பிற்பகல் 5.30 மணிக்குள் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும். மேற்காணும் காலக் கெடுவிற்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட மாட்டாது. விண்ணப்பங்களின் கூர்ந்தாய்வுக்குப் பின் தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணல் நடைபெறும். அதன் விவரங்கள் தனியே தெரிவிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு நாகப்பட்டினம் மாவட்ட புள்ளி இயல் துணை இயக்குநர் அலுவலகத்தை மேல்குறிப்பிட்ட விலாசத்திற்கு அணுகுமாறு மாவட்ட கலெக்டர் சு.பழனிசாமி, தெரிவித்துள்ளார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்