முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழர்களின் கலாச்சார உணர்வுகளை மதித்து ஜல்லிக்கட்டை நடத்த மத்திய அரசு துணையாக இருக்கும் :மோடி உறுதி

சனிக்கிழமை, 21 ஜனவரி 2017      இந்தியா
Image Unavailable

 புதுடெல்லி  - தமிழர்களின் கலாச்சார உணர்வுகளை மதித்து, ஜல்லிக்கட்டு நடத்துவதற்காக தமிழக அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும், மத்திய அரசு துணையாக இருக்கும் என பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் உறுதிபட தெரிவித்துள்ளார். தமிழக அரசு மேற்கொண்டு வரும் தீவிர நடவடிக்கை காரணமாக ஜல்லிகட்டு விரைவில் நடைபெற உள்ளது. இதனிடையே,  தமிழகத்தில் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து பிரதமர் நரேந்திர மோடியை, முதலமைச்சர்  ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து வலியுறுத்தினார். அப்பொழுது தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு துணையாக இருக்கும் என பிரதமர் உறுதி அளித்திருந்தார்.

மோடி டுவிட்டரில் உறுதி :

இந்நிலையில், தமிழர்களின் உயரிய கலாச்சாரத்தை நினைத்து பெருமை கொள்வதாக பிரதமர் நரேந்திரமோடி தனது, டுவிட்டர் பக்கத்தில் நேற்று மீண்டும் பதிவு செய்துள்ளார். தமிழர்களின் கலாச்சார உணர்வுகளை மதித்து, தமிழக அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் மத்திய அரசு துணை நிற்கும் என்றும் அவர் உறுதிபட தெரிவித்துள்ளார். தமிழர்களின் பாரம்பரிய ஜல்லிக்கட்டு விளையாட்டை நடத்த மத்திய அரசும் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago