Idhayam Matrimony

கூடங்குளம் 2-வது அணு உலையில் மின் உற்பத்தி செய்ய இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல்

சனிக்கிழமை, 21 ஜனவரி 2017      தமிழகம்
Image Unavailable

கூடங்குளம்  - நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 2-வது அணு உலையில் ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்ய, இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் வழங்கியதையடுத்து, மின் உற்பத்தி படிப்படியாக அதிகரிக்கப்பட்டு,  நேற்று 920 மெகாவாட் உற்பத்தி செய்யப்பட்டது.

 2வது அணு உலை மின் உற்பத்தி :

கூடங்குளத்தில் தலா ஆயிரம் மெகாவாட் உற்பத்தி திறன்கொண்ட 2 அணு உலைகள் நிறுவப்பட்டுள்ளன. முதல் அணு உலையில் முழு கொள்ளளவு திறனான ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வணிக ரீதியாகவும் விநியோகிக்கப்பட்டு வருகிறது. 2வது அணு உலையை பொருத்தவரை, கடந்த சில மாதங்களுக்கு முன்புதான், நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டது. இதன் பின்னர், 2வது அணு உலையில் 684 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது.

இந்நிலையில், 2வது அணு உலையில் ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்ய இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் வழங்கியது. இதனையடுத்து, நேற்று முன்தினம்  880 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து மின் உற்பத்தி மேலும் அதிகரிக்கப்பட்டு, நேற்று காலை 920 மெகாவாட்டை எட்டியுள்ளது. இன்னும் சில நாட்களில் ஆயிரம் மெகாவாட் முழு உற்பத்தி திறனை எட்டும் என கூடங்குளம் அணுமின் நிலைய வளாக இயக்குநர் சுந்தர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்