முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவின் 45-வது அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்றார் : பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து

சனிக்கிழமை, 21 ஜனவரி 2017      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்  - 45-வது அதிபராக குடியரசு கட்சியைச் சேர்ந்த டொனால்டு ட்ரம்ப்  (வயது 70) நேற்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கறுப்பின அதிபர் ஒபாமா :
ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த பராக் ஒபாமா கடந்த 2009-ல் முதல் கறுப்பின அதிபராக பொறுப்பேற்றார். பின்னர் 2013-ல் 2-வது முறையாக ஒபாமா அதிபராக பொறுப்பேற்றார். அவரது பதவிக்காலம் முடிய இருந்ததையடுத்து கடந்த நவம்பர் 8-ம் தேதி அதிபர் தேர்தல் நடை பெற்றது.

ட்ரம்ப் வெற்றி :
இதில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் ஹிலாரி கிளின்டனும் குடியரசு கட்சியின் சார்பில் ட்ரம்பும் போட்டி யிட்டனர். தேர்தல் பிரச்சாரத்தின்போது ட்ரம்ப் சர்ச்சைக்குரிய வகையில் பேசி பரபரப்பை ஏற்படுத்தினரா். இதனிடையே, ஹிலாரி வெற்றி பெறுவார் என பெரும்பாலான கருத்து கணிப்புகள் தெரிவித்தன. இதையெல்லாம் பொய்யாக்கி ட்ரம்ப் வெற்றி பெற்றார். இந்நிலையில், வாஷிங்டன் நகரில் உள்ள தேசிய மைதானத்தில் (கேப்பிட்டால்) பதவி யேற்பு விழா நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் ஒபாமா, பில் கிளின் டன், ட்ரம்ப் குடும்பத்தினர், ஹிலாரி கிளின்டன் உட்பட சுமார் 8 லட்சம் பேர் பங்கேற்றனர்.

பதவி ஏற்றார் ட்ரம்ப் :
இவ்விழாவில், வரலாற்று சிறப்பு மிக்க ஆப்ரகாம் லிங்கனின் பைபிளின் மீது டொனால்டு ட்ரம்ப் தனது கையை வைத்து, நாட்டின் 45-வது அதிபராக பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமானம் செய்து வைத்தார். முன்னதாக, மைக் பென்ஸ் துணை அதிபராக பதவியேற்றுக்கொண்டார்.
முன்னதாக, வெள்ளை மாளிகை யில் ஒபாமாவை ட்ரம்ப் சந்தித்துப் பேசினார். அப்போது, ஒபாமாவும் அவரது மனைவி மிஷேலும் ட்ரம்ப்-மெலனியா தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் அனைவரும் பதவியேற்பு விழா நடைபெற்ற இடத்துக்கு வந்தனர்.  பதவியேற்றுக்கொண்ட பிறகு ட்ரம்ப் பேசும்போது, “இந்த நாள் உங்களுடையது, இந்த விழா உங்களுடையது, இது உங்கள் நாடு. அரசு எடுக்கும் ஒவ்வொரு முடிவும் அமெரிக்கர்களும் அவர்களது குடும்பத்தினரும் பயனடையும் வகையில் இருக்கும்” என்றார். 

இந்திய பிரதமர் மோடி வாழ்த்து :
அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்றுக்கொண்ட ட்ரம்புக்கு ட்விட்டரில் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து மோடி கூறும்போது, “இந்திய-அமெரிக்க உறவை மேலும் வலுப்படுத்து ட்ரம்புடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் உள்ளேன்” என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago