முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இழந்த வேலை வாய்ப்புகளைத் திரும்பப் பெறுவோம் : அமெரிக்கா மீண்டும் முதலிடத்தில் இருக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பேச்சு

சனிக்கிழமை, 21 ஜனவரி 2017      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்  - அமெரிக்காவின் 45வது அதிபராக பதவியேற்ற ட்ரம்ப் அமெரிக்கா மீண்டும் முதலிடத்தில் இருக்கப் போகிறது என்று கூறியுள்ளார். அதிபராக உறுதிமொழி எடுத்துக் கொண்ட ட்ரம்ப் 16 நிமிடங்கள் உரை நிகழ்த்தினார்.  வாஷிங்டன் நகரில் உள்ள தேசிய மைதானத்தில் பதவியேற்பு விழா  நடைபெற்றது. இவ்விழாவில் முன்னாள் அதிபர்கள் ஒபாமா, பில் கிளின்டன் கலந்து கொண்டனர். ட்ரம்ப் குடும்பத்தினரும் கலந்து கொண்டனர். ஹிலாரி கிளின்டன் உட்பட சுமார் 8 லட்சம் பேர் பங்கேற்றனர்.

ட்ரம்ப்பின் பேச்சு:
"கடந்த நான்கு வருடங்களாக அற்புதமாக பணியாற்றிய அமெரிக்க முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா மற்றும் அமெரிக்க முதல் பெண்மணி மிச்செல் ஒபாமாவுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நம் முன் நிறைய சவால்கள் உள்ளன. அமெரிக்க மக்களாகிய நாம் ஒற்றுமையுடன் செயல்பட்டால் மீண்டும் அமெரிக்கவை பாதுகாப்பான நாடாகவும், வலிமைமிக்க செல்வமிக்க நாடாகவும் மாற்ற முடியும். அமெரிக்க படுகொலைகள் இன்றுடன் முடிவுக்கு வருகிறது. இன்று முதல் புதிய பார்வை அரசாங்கத்திடம் உள்ளது. இனி அமெரிக்கா முதல் இடத்தில் இருக்க போகிறது.

இந்த நாள் உங்களுக்கான நாள், உங்கள் கொண்டாட்டத்துக்கான நாள். இனி, அமெரிக்கா அமெரிக்கர்களுக்கு உரிய நாடாக இருக்க போகிறது. நான் உங்களுக்காக எனது இறுதி மூச்சு உள்ளவரை போராடுவேன். அமெரிக்க மக்களை கீழே விழ அனுமதிக்க மாட்டேன். அமெரிக்கா மீண்டும் அதன் வெற்றியை நோக்கி பயணிக்கப் போகிறது முன் இல்லாததை விட, நாம் இழந்த வேலை வாய்ப்புகளைத் திரும்பப் பெற போகிறோம். நாம் கனவுகளை மீண்டும் வெற்றிகரமாக மாற்றப் போகிறோம். பிற நாட்டினர் நம்மை பின் தொடருமாறு நாம் ஒளிரப் போகிறோம். ஒற்றுமையாக இருந்தால் அமெரிக்காவை யாரலும் தடுக்க முடியாது.

வெற்று பேச்சு இத்துடன் முடிவடைந்துவிட்டது. இனி இதனை செயலில் காட்ட வேண்டும். உங்களால் முடியாது என்று யாரையும் சொல்ல அனுமதிக்காதீர்கள், அமெரிக்க மக்களின் போராட்ட குணங்களுக்கு மத்தியில் எந்த சவாலும் ஈடாகாது. மீண்டும் அமெரிக்கா பாதுகாப்பான நாடாக மாறப் போகிறது. கடவுள் உங்களை ஆசிர்வதிப்பார். நன்றி" என்று கூறினார்.

ட்ரம்புக்கு எதிராக போராட்டம்:
இதற்கிடையில், ட்ரம்ப் அதிபராக பதவியேற்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாஷிங்டனில் 200-க்கு மேற்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் போரட்டம் நடத்தினர். ட்ரம்புக்கு எதிராக 'ட்ரம்ப் எங்கள் அதிபரல்ல' போன்ற முழுக்கங்களை அவர்கள் எழுப்பினர். பின்னர் ஆர்ப்பாட்டக்காரர்கள் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago