முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உத்தரப் பிரதேச தேர்தலில் பிரியங்கா பிரச்சாரம் இல்லை : மாநில காங்கிரஸ் கட்சியினர் அதிர்ச்சி

சனிக்கிழமை, 21 ஜனவரி 2017      அரசியல்
Image Unavailable

லக்னோ  - உ.பி.யில் சுமார் 40 ஆண்டுகள் இருந்த தமது ஆட்சியை மீண்டும் பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் காங்கிரஸ் களம் இறங்கியது. இக்கட்சியின் தேர்தல் ஆலோசகர் பிரஷாந்த் கிஷோர், “உ.பி.யில் பிரியங்காவால் மட்டுமே காங்கிரஸை காப்பாற்ற முடியும்” என்று கூறியிருந்தார். பிரியங்காவை முதல்வர் வேட் பாளராக முன்னிறுத்தவும் அவர் ஆலோசனை அளித்திருந்தார்.  இதை கட்சியின் மூத்த தலைவர்கள் ஏற்கவில்லை. என்றா லும் உ.பி. சட்டப்பேரவை தேர்தலில் பிரியங்கா முதல்முறையாக தீவிரப் பிரச்சாரம் செய்வார் என தலைவர்கள் கூறி வந்தனர். இதற்காக உ.பி. காங்கிரஸார் ஆவலுடன் காத்திருந்தனர். இந்நிலையில் இவர்கள் அனைவரும் ஏமாற்றம் அடையும் வகையில் இந்த முறையும் பிரச்சாரம் செய்யப்போவதில்லை என பிரியங்கா முடிவு செய்துள்ளார்.

எளிதில் வெற்றி:
இது குறித்து காங்கிரஸ் கட்சியின் தேசிய நிர்வாகிகள் வட்டாரம் கூறும் போது, “உ.பி. தேர்தலில் பிரச்சாரம் செய்யப்போவதில்லை என்ற தகவலை பிரியங்கா அம்மாநில காங்கிரஸ் தலைவர்களிடம் தெரிவித்துள்ளார். வழக்கம்போல், ராகுல் காந்தியின் அமேதி, சோனியா காந்தியின் ராய்பரேலி ஆகிய தொகுதிகளில் மட்டும் அவர் பிரச்சாரம் செய்வார்” என்று தெரிவித்தனர்.பிரியங்கா இம்முறை உ.பி. முழுவதும் பிரச்சாரம் செய்வார் என கூறப்பட்டது. மேலும் அங்கு ஆளும் சமாஜ்வாடி  கட்சியுடனும் கூட்டணி வருவதால் எளிதில் வென்று விடலாம் என காங்கிரஸ் வேட்பாளர்கள் எண்ணியிருந்தனர். இந்நிலையில் காங்கிரஸ் தனித்து போட்டியிடாமல் சமாஜ் வாடி கட்சியுடன் கூட்டணி சேர்வ தால் பிரியங்கா தனது முடிவை திடீரென மாற்றிக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இது உ.பி. காங்கிரஸாரை மிகுந்த அதிர்ச்சிக் குள்ளாக்கி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago