முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அதிபராக பதவியேற்றதும் முதல் நடவடிக்கையாக ஒபாமாவின் சுகாதார திட்டத்துக்கு எதிராக டிரம்ப் கையெழுத்து

சனிக்கிழமை, 21 ஜனவரி 2017      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்  - அமெரிக்க அதிபரின் பதவிக்காலம் முடிவு அடைந்ததையடுத்து புதிய அதிபராக டொனால்டு டிரம்ப் நேற்று பதவியேற்றார். பதவி ஏற்றதும் முதல் ஒபாமா கொண்டு வந்த சுகாதார காப்பீடு திட்டத்தை ரத்து செய்வதற்கு கையெழுத்திட்டார்.பல லட்சம் கோடி டாலர் மதிப்பிலான சுகாதார பாதுகாப்பு மசோதாவை அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா 5 ஆண்டுகளுக்கு முன்பு கொண்டு வந்தார். இந்த திட்டம் நாட்டின் நிதிக்கு பெரும் சுமையாக இருப்பதாக டொனால்டு டிரம்ப் குற்றம் சாட்டி வந்தார்.

இந்த நிலையில்,அமெரிக்காவின் 45-வது அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்றுக்கொண்டதும், முதல் கையெழுத்தாக ஒபாமாகேர் திட்டத்தை ரத்து செய்தார். இந்த தகவலை வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் தெரிவித்தார். ஒபாமா சுகாதார காப்பீட்டு திட்டத்துக்கு மாற்றாக ஒரு சுகாதார காப்பீடு திட்டத்தை கொண்டு வந்தால் மட்டுமே, சுகாதார நலன் துறையில் குடியரசு கட்சியினருடன் தங்கள் சேர்ந்து பணியாற்றுவதை கருத இயலும் என்று அமெரிக்க செனட் அவையின் ஜனநாயக கட்சித் தலைவரான ஷக் சூமர் தெரிவித்துள்ளார் என்பது கவனிக்கத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்