முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், எருமியாம்பாட்டி மற்றும் கோடியூர் ஆகிய பகுதிகளில் பகுதிநேர நியாய விலைக் கடைகள்:அமைச்சர் கே.பி.அன்பழகன் திறந்து வைத்தார்

ஞாயிற்றுக்கிழமை, 22 ஜனவரி 2017      தர்மபுரி
Image Unavailable

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், எருமியாம்பாட்டி மற்றும் கோடியூர் ஆகிய பகுதிகளில் பகுதிநேர நியாய விலைக் கடைகளை  உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன்   திறந்து வைத்து தெரிவித்ததாவது :-

 தமிழக முதல்வர்  அறிவித்த அனைத்து திட்டங்களையும் தமிழக அரசு அறிவித்து செயல்படுத்தி வருகிறது. தருமபுரி மாவட்டத்தில் 22,590 புதிய குடும்ப அட்டைகள் இதுவரை வழங்கப்பட்டுள்ளது. 200 குடும்ப அட்டைகள் இருந்தால்தான் பகுதிநேர நியாயவிலைக்கடை அமைக்க முடியும். ஆனால் 150 குடும்ப அட்டைகள் உள்ள இரண்டு கிராமத்திற்கும் பகுதிநேர நியாய விலைக்கடை கொண்டு வருவதில் சிரமம் உள்ளது. இதை  தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா அவர்களிடம் கணிவான பார்வைக்கு கொண்டு வந்தேன்.  அம்மா  பாலக்கோடு வட்டத்தில் தான் விதிகளை தளர்வு செய்து சிறப்பு சட்டத்தின் மூலம் நடைமுறைப்படுத்தப்பட்டு ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் நான்கு பகுதிநேர நியாய விலைக்கடைகளை வழங்கியுள்ளார்கள். அதேபோல் மாவட்ட ஆட்சியரின் சிறப்பான முயற்சியால் 22,211 நபர்களுக்கு புதிய குடும்ப அட்டை வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் புதிய குடும்ப அட்டை வேண்டி விண்ணப்பம் செய்தவர்கள் மாவட்ட வழங்கல் அலுவலரை தொடர்பு கொண்டு உரிய படிவத்தைப்பெற்று சரியான முறையில் பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். அவ்வாறு செய்தால் தான் தங்கு தடையில்லாமல் மாவட்ட நிர்வாகம் விண்ணப்பங்களை பெற்று உரிய நபர்களுக்கு புதிய குடும்ப அட்டையினை விரைந்து வழங்க முடியும்.  மேலும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் பல்வேறு கிராமங்களைத் தேர்வு செய்து அம்மா திட்ட சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதை பொதுமக்கள் தங்களுக்கு தேவையான புதிய குடும்ப அட்டை மற்றும் சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், பட்டா, சிட்டா, ஆதார் அட்டை, பயிர்க்காப்பீடு, முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு,  வேளாண்மைத்துறையில் வட்டியில்லா கடன், பயிர்க்காப்பீடு, மானியத்துடன் வேளாண் உபகரண பொருட்கள், சொட்டு நீர் பாசனம் போன்ற பல்வேறு துறைகளின் சம்பந்தமான மக்களின் கோரிக்கைகளுக்கு ஏற்ப சட்ட விதிகளுக்கு உட்பட்டு அம்மா திட்ட முகாம்களில் மனுக்கள் பெறப்பட்டு உடனடி தீர்வு காணப்பட்டு வருகிறது. இத்திட்டத்தையும் பொதுமக்களாகிய நீங்கள் பயன்படுத்தி பயனடைய வேண்டுமென  உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன்  தெரிவித்தார்.முன்னதாக செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அதிநவீன மின்னணு விளம்பர வாகனத்தின் மூலம் தமிழக அரசின் நலத்திட்டங்கள் மற்றும் சாதனைகள் விளக்கப்படங்களை  உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன்  பார்வையிட்டார். இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட வருவாய் அலுவலர்  அ. சங்கர், கோட்டாட்சியர்  இராமமூர்த்தி, துணைப்பதிவாளர்  சொ.தனபால், பாலக்கோடு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்  மாதப்பன், முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர்  தொ.மு.நாகராசன், பாலக்கோடு சர்க்கலை ஆலை தலைவர்  அரங்கநாதன், மத்தியக்கூட்டுறவு வங்கி இயக்குநர்  வேலுமணி, தருமபுரி மாவட்ட கூட்டுறவு நிறுவனங்களின் பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன மற்றும் கடன் சங்கத் தலைவர்                எம். பெரியசாமி, ஜெர்த்தலாவ் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவர்  வீரமணி, துணைத் தலைவர்  சங்கீதா பெரியசாமி, முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர்  ரவிச்சந்திரன், உட்பட பலர் உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago