முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சேலம் மாவட்டம், ஆத்தூர் வட்டம், மலையம்பட்டியில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது

ஞாயிற்றுக்கிழமை, 22 ஜனவரி 2017      சேலம்

சேலம் மாவட்டம், ஆத்தூர் வட்டம், சீலியம்பட்டி புதூர் கிராமம், மலையம்பட்டியில்  பொதுமக்கள் வாடிவாசல் அமைத்து தங்கள் காளைகளை அவிழ்த்துவிட்டு ஜல்லிக்கட்டு நடத்தினார்கள். தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையினை தொடர்ந்து,  தமிழக முதல்வர் அவர்களின் தொடர் முயற்சியால் மேதகு தமிழக ஆளுநர் மூலம் ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் நேற்றைய தினம் (21.01.2017) பிறப்பிக்கப்பட்டது. சேலம் மாவட்டத்தில் நேற்றைய தினம் இரவு ஆத்தூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கலெக்டர் வா.சம்பத், , மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி.ராஜன்  மற்றும் கோட்டாட்சியர், கால்நடை பராமரிப்புத்துறை, மருத்துவத்துறை, தீயணைப்புத்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் மற்றும் ஜல்லிக்கட்டு நடத்தும் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.  இதனை தொடர்ந்து சேலம் மாவட்டம், ஆத்தூர் வட்டம், சீலியம்பட்டி புதூர் கிராமம், மலையம்பட்டியில்  பொதுமக்கள் வாடிவாசல் அமைத்து தங்கள் காளைகளை அவிழ்த்துவிட்டு ஜல்லிக்கட்டு நடத்தினார்கள்.        இந்த நிகழ்ச்சியில் 4 கோவில் காளைகள் உள்பட்ட 20க்கும் மேற்பட்ட காளைகள் வாடிவாசல் வழியாக அவிழ்த்துவிடப்பட்டது. 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஆர்வமுடன் காளையினை பிடித்தனர். இன்று காலை 10.00 மணிக்கு தொடங்கிய இந்நிகழ்ச்சி தொடர்ந்து 3 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்றது. இதனை ஏராளமான பொதுமக்கள் கண்டுகளித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்