ஓசூரில் பொங்கல் கலை இலக்கிய விழா

ஞாயிற்றுக்கிழமை, 22 ஜனவரி 2017      தர்மபுரி
hsr

ஓசூரில் பொங்கல் கலை இலக்கிய விழா ஊர்வலம் தமிழ் வளர்ச்சி மன்றம் மற்றும் தமிழ்க்கலை இலக்கிய பேரவை சார்பில் நடைபெற்றது. இந்த பொங்கல் விழா ஊர்வலம் ரயில் நிலையத்தில் தொடங்கி காமராஜர் காலனியில் முடிவடைந்தது. ஊர்வலத்தில் திருவள்ளுவர் போன்று பள்ளி சிறுவர்கள் வேடம் அணிந்திருந்தனர்.தமிழர்களின் பாரம்பரிய கலையான சிலம்பாட்டம்,வயிலாட்டம் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஈரோடு கலைத்தாய் கலைக்குழுவின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இந்த ஊர்வலத்திற்கு தமிழ் வளர்ச்சி மன்றம் தலைவரும்,கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று மையத்தின் தலைவருமான மனோகரன் தலைமை வகித்து ஊர்வலத்தை துவக்கி வைத்தார்.அனைவரையும் தமிழ் வளர்ச்சி மன்ற சிவந்தி அருணாச்சலம் அனைவரையும் வரவேற்றி பேசினார். தமிழ் தேசிய பேரியக்கம் மாரிமுத்து முன்னிலை வகித்தார்.தமிழ்த்தேசியப் பேரியக்கம் பொது செயலாளர் வெங்கட்ராமன்,குக்கூ தரைப்பட இயக்குநர் இராஜமுருகன் ஆகியோர் உரையாற்றினார்.முடிவில் தமிழ் கலை இலக்கிய பேரவை முத்துவேலு நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: