நகராட்சி பகுதிகளில் தடை செய்யப்பட்ட பொருட்கள்ஆய்வு

ஞாயிற்றுக்கிழமை, 22 ஜனவரி 2017      நீலகிரி

நீலகிரி மாவட்டத்தில் நகராட்சி பகுதிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் குறித்த ஆய்வில் 6 கிலோ எடைகொண்ட பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

                                      ஒட்டு மொத்த கள ஆய்வு

நீலகிரி மாவட்டத்தில் குன்னூர், கூடலூர் மற்றும் நெல்லியாளம் நகராட்சிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் உபயோகத்தை தவிர்ப்பது தொடர்பான விழிப்புணர்வினை பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் மத்தியில் ஏற்படுத்தும் பொருட்டு மாவட்ட கலெக்டரின் வழிகாட்டுதலின்படி 21_ந் தேதி ஒரு நாள் ஒட்டுமொத்த கள ஆய்வு நகராட்சி அலுவலர்களால் மேற்கொள்ளப்பட்டது.

                                   7 குழுக்கள் நியமனம்

இதற்காக குன்னூர் நகராட்சியில் 4 குழுக்களும், கூடலூர் நகராட்சியில் ஒரு குழுவும், நெல்லியாளம் நகராட்சியில் 2 குழுக்களும் நியமிக்கப்பட்டது. இக்குழுவினர் சுற்றுலா மற்றும் வெளியூர் வாகனங்களை ஆய்வு செய்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்ததுடன் அதற்கு பதிலாக மாவட்ட நிர்வாகத்தால் வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் சார்ந்த துணிப்பைகளை வழங்கினர்.

                                  6 கிலோ பறிமுதல்

இந்த ஆய்வின் போது தடை செய்யப்பட்ட 6 கிலோ எடை கொண்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஒட்டுமொத்த அபராதத்தொகையாக மொத்தம் ரூ.6,350 வசூல் செய்யப்பட்டது. இனிவரும் காலங்களில் பொதுமக்களும், சுற்றுலா மற்றும் வெளியூர் பயணிகளும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உபயோகப்படுத்துவதை தவிர்த்து நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச்சூழலை பாதுகாத்திட ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இத்தகவலை மாவட்ட கலெக்டர் முனைவர் பொ.சங்கர் தெரிவித்துள்ளார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: