தையல் இயந்திரம் பெற சமூக நல அலுவலகத்தை அணுகலாம்

ஞாயிற்றுக்கிழமை, 22 ஜனவரி 2017      நீலகிரி

தையல் இயந்திரம் பெற சமூக நல அலுவலகத்தை அணுகலாம் என நீலகிரி மாவட்ட கலெக்டர் முனைவர் பொ.சங்கர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு-

                             வருமான உச்சவரம்பு

சமூக நலத்துறையின் கீழ் இயங்கும் 9 அரசு சேவை இல்லங்களில் உள்ளுறைவோர்களின் சேர்க்கை, அரசு இடைநிலை ஆசிரியைப் பயிற்சிக்கான மாணவியர் சேர்க்கை மற்றும் சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெறுதல் ஆகியவற்றிற்கு தகுதியாக நிர்ணயிக்கப்பட்டு குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பினை ரூ.24 ஆயிரத்திலிருந்து ரூ.72 ஆயிரமாக உயர்த்தி 02.12.2016 அன்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

                            சமூக நல அலுவலகம்

 எனவே இத்திட்டத்தில் பயன்பெற தகுதியான விண்ணப்பதாரர்கள் மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட சமூகநல அலுவலகம், அன்னதானி பில்டிங், ஸ்டேட் பேங்க் லைன், ஊட்டி_1, 0423_2443392 என்ற முகவரியிலும், ஊட்டி, குன்னூர், கோத்தகிரி மற்றும் கூடலூர் ஆகிய இடங்களில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்தை அணுகுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இத்தகவலை மாவட்ட கலெக்டர் முனைவர் பொ.சங்கர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: