ஊட்டியில் வரும் 25_ந் தேதி வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

ஞாயிற்றுக்கிழமை, 22 ஜனவரி 2017      நீலகிரி

ஊட்டியில் வரும் 25_ந் தேதி நடைபெறும் வாக்காளர் விழிப்புணர்வு பேரணியில் திரளாக கலந்து கொள்ளுமாறு மாவட்ட கலெக்டர் முனைவர் பொ.சங்கர் அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு-

                                     வாக்காளர் தின உறுதிமொழி

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி வரும் 25_ந் தேதி தேசிய வாக்காளர் தினத்தை கொண்டாட மாவட்ட நிர்வாகம் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது. தேசிய வாக்காளர் தினத்தன்று மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களில் வாக்காளர் தின உறுதிமொழி எடுக்கப்படும். மேலும் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டுள்ள அனைத்து வாக்காளர்களுக்கும் புகைப்பட வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்கப்படும். இதற்கென தயார் செய்யப்பட்டுள்ள புகைப்பட வாக்காளர் அடையாள அட்டைகள் சம்பந்தப்பட்ட வட்டாட்சியர்கள் மற்றும் நகராட்சி ஆணையாளர்கள் மூலம் அந்தந்த வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளன.

                                    பேச்சி, கட்டுரைப் போட்டி

25_ந் தேதியன்று அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர்களின் ஒத்துழைப்புடன் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்படும். மேலும் முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி

அலுவலர்கள் மற்றும் கல்லூரி முதல்வர்களின் ஒத்துழைப்புடன் வாக்காளராக பதிவு செய்ய வேண்டியதன் அவசியத்தையும் மற்றும் தேர்தலில் பங்கேற்க வேண்டயதன் அவசியத்தையும் வலியுறுத்த பல்வேறு தலைப்புகளில் பேச்சுப்போட்டிகள் மற்றும் கட்டுரைப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

                              விழிப்புணர்வு பேரணி

மாவட்ட அளவில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பங்குபெறும் பேரணி நடத்த விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப்பேரணி ஊட்டி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து காலை 10.15 மணிக்கு தொடங்கி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று அண்ணா கலையரங்கில் நிறைவு பெறும். அதன்பின்னர் அண்ணா கலையரங்கில் கலைநிகழ்ச்சிகளும், பேச்சு மற்றும் கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்படுகின்றன. இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட கலெக்டர் முனைவர் பொ.சங்கர், முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர் ஸ்ரீனிவாச ரெட்டி ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சிகளில் பொதுமக்கள், மாணவர்கள், அரசு அலுவலர்கள், வணிகர்கள், ஓட்டுநர்கள் மற்றும் அனைவரும் பெருமளவில்கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு கலெக்டர் முனைவர் பொ.சங்கர் தெரிவித்துள்ளார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: