ஈரோடு மாவட்டத்தில் பரவலாக மழை பொதுமக்கள் மகிழ்ச்சி

ஞாயிற்றுக்கிழமை, 22 ஜனவரி 2017      ஈரோடு

பருவமழை பொய்த்து போனதால் ஈரோடு மாவட்டத்தில் கடுமையான வறட்சி நிலவி வருகிறது. இதனால் மழை பெய்யுமா? என்று விவசாயிகள் உள்பட அனைத்து தரப்பு மக்களுக்கும் எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள்   இந்த நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு நேற்று அதிகாலை ஈரோட்டில் திடீரென மழை பெய்தது. அதன்பின்னர் நேற்று மாலை 4 மணியில் இருந்து விட்டுவிட்டு மழை பெய்துகொண்டு இருந்தது. இந்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதேபோல் கொடுமுடி, அம்மாபேட்டை உள்பட ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று பரவலாக மழை பெய்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்: