ஈரோட்டில் ஆம்வேயின் பிக் ரூ பே ஸ்டோர்பிராண்டு மையம் தொடக்கம்

ஞாயிற்றுக்கிழமை, 22 ஜனவரி 2017      ஈரோடு
22-1-17  erode amway open

நேரடி விற்பனை எஃப்எம்சிஜி துறையில் இந்நாட்டின் முன்னணி நிறுவனமான ஆம்வே இந்தியா, ஒரு எக்ஸ்பிரஸ் பிக் ரூ பே ஸ்டோர் மற்றும் பிராண்டு மையத்தை ஈரோட்டில் தொடங்கியிருக்கிறது.5,000 ச.அடி என்ற மிகப்பெரிய பரப்பளவில் அமைந்திருக்கும் இந்த புதிய ஆம்வே பிக் ரூ பே ஸ்டோர் ஈரோட்டில் எண். 521, பெருந்துறை சாலை என்ற முகவரியிலும் அமைந்துள்ளன. இந்த ஸ்டோரின் வடிவமைப்பானது, ஒரு ~மினி ஷாப்பிங் சென்டர்| என்பதற்கு நிகரானதாக உருவாக்கப்பட்டுள்ளது. ஆம்வே நிறுவனத்தால் வழங்கப்படும் உயர்தரமான பொருட்களை ஆம்வே நுகர்வோர்களும் மற்றும் விநியோகஸ்தர்களும் தொட்டு ஃ உணர்ந்து, பார்த்து வாங்குவதற்கு ஒரு வாய்ப்பை வழங்கும் வகையில் இந்த வடிவமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. உடல்நலம் மற்றும் அழகு ஆகிய அம்சங்கள் மீது தொழில்முறை ஆலோசகர்கள் நிபுணத்துவம் மிக்க ஆலோசனையை வழங்கக்கூடிய ஒரு பிராண்டு மையமும் இந்த ஸ்டோரில் இடம்பெற்றிருக்கிறது.

ஆர்வமும் மற்றும் பாராட்டுகளும்

முற்றிலும் புதிய இந்த ஆம்வே ஸ்டோர் தொடங்கப்பட்டுள்ளது குறித்து கருத்து தெரிவித்த ஆம்வே இந்தியாவின் மேற்கு மற்றும் தெற்கு பிராந்தியத்தின் முதுநிலை துணைத்தலைவர்  சந்தீப் பிரகாஷ், ~~ஆம்வே தயாரிப்புகளுக்கு ஆர்வமும் மற்றும் பாராட்டுகளும் மக்கள் மத்தியில் அதிகளவில் இருந்து வருகின்றன. இந்த ஆம்வே எக்ஸ்பிரஸ் பிக் ரூ பே ஸ்டோர் மற்றும் பிராண்டு மையத்தை தொடங்குவதற்கு மக்களின் இந்த ஊக்குவிப்பே காரணமாகும்.

 ஈரோடு மற்றும் அருகாமையிலுள்ள பகுதிகளிலும் வாழும் நுகர்வோர்களுக்கு ஆம்வேயின் தயாரிப்புகள் உடனடியாகவும் மற்றும் அதிகரித்த அளவிலும் கிடைக்கும் நிலையை உருவாக்குவதில் இந்த ஸ்டோர்கள் ஒரு மிக முக்கிய பங்கை ஆற்றும்,|| என்று கூறினார்.~~விநியோகஸ்தர்களுக்கு எடுத்துக்கூறி கற்பிப்பதற்கு வழங்கப்படும் உரிய பயிற்சிகளின் வழியாக இந்த பிராண்டு அனுபவ மையமானது, ஆதரவளிக்கப்படும். இறுதியில் பயன்படுத்துகின்ற நுகர்வோர்களுக்கு ஒரு பொருத்தமான தயாரிப்புகளை பரிந்துரைக்கவும் மற்றும் அதுகுறித்து எடுத்துக்கூறி கற்பிக்கவும் மற்றும் வழிகாட்டவும் இது விநியோகஸ்தர்களுக்கு சிறப்பாக உதவும் என்பதால் இந்த பயிற்சியானது, எங்களைப் பொறுத்தவரை மிக முக்கியமானதாகும்,|| என்று சந்தீப் பிரகாஷ் மேலும் விளக்கம் அளித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: