பவானி ஆற்றில் அனுமதியின்றி நீர் எடுத்த குழாய்கள் அகற்றம்

ஞாயிற்றுக்கிழமை, 22 ஜனவரி 2017      ஈரோடு

பவானி ஆற்றிலிருந்து அனுமதியின்றி தண்ணீர் எடுத்த குழாய்கள் அகற்றப்பட்டன. பவானிசாகர் அணையில் தண்ணீர் குறைந்ததால், குடி நீருக்கு மட்டும் பவானி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. ஆற்றி லிருந்து விவசாயத்திற்கு தண்ணீர் எடுக்கக் கூடாது என, சப் - கலெக்டர் கிருஷ்ணன் உன்னி உத்தரவிட்டார். இந்நிலையில், கொமரபாளையம் பகுதியில், விவசாயத்துக்கு அனுமதியின்றி ஆற்றில் இருந்து குழாய் மூலமாக, தண்ணீர் எடுப்பதாக, பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதன்படி, நேற்று மதியம், அதிகாரிகள் சென்று ஆய்வு நடத்தினர். இதில் தண்ணீர் எடுத்த குழாய்களை ஜே.சி.பி இயந்திரத்தின் மூலம் அகற்றினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: