நெல்லை
தென்காசி மற்றும் செங்கோட்டை பகுதியில் சாரல் மழை பெய்ததால் குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து ஏற்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் பருவமழை பொய்த்து விட்டதால் விவசாய நிலங்கள் பயிர் செய்ய முடியாமல் வறண்டன. நிலத்தடி நீர் கிடு கிடு என குறைந்ததால் குடிநீர் பற்றாக்குறையும் தலை விரித்தாடுகிறது. இந்நிலையில் 21ம் தேதி காலை முதல் இரவு வரை தென்காசி, செங்கோட்டை, குற்றாலம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதியில் சாரல் மழை பெய்தது. மழை மேக கூட்டத்துடன் விட்டு விட்டு சாரல் மழை தொடர்ந்ததால் மாலை நேரத்தில் குளிர் அதிகமாக இருந்தது.போதிய மழை இன்றி குற்றால அருவிகளில் தண்ணீர் இல்லாமல் வறண்டு இருந்த நிலையில் குற்றாலம் மலைப் பகுதியிலும் சாரல் மழை தலை காட்டியதால் அருவிகளுக்கு தண்ணீர் வரத்து ஏற்பட்டது. மாலை நேரத்தில் மெயினருவியில் பரவலாக தண்ணீர் வரத்து இருந்தது. மேலும் ஐந்தருவியிலும் தண்ணீர் வரத்து ஏற்பட்டது. சிற்றருவி, புலியருவியிலும் சிறிதளவு தண்ணீர் விழுந்தது. மெயின் அருவியில் தொடர்ந்து நீரின் வரத்து அதிகரித்து கொண்டே போனதால் ஆர்ச்சை தாண்டி தண்ணீர் விழுந்தது இதனால் அருவியில் சுற்றுலாவாசிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது
- பழனி ஆண்டவர் வெள்ளி ஆட்டுக்கிடா வாகனத்தில் பவனி.
- கோயம்புத்தூர் பாலதண்டாயுதபாணி சந்திர பிரபையில் பவனி.
- திருவிடைமருதூர் சுவாமி தம்மைத்தானே அர்ச்சித்தல். சகோபரவெள்ளி விருசப சேவை.
- மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் சுவாமி நந்திசுவர வாகனத்தில் பவனி.
- திருப்பரங்குன்றம் ஆண்டவர் சின்ன வைர ரதம்.
- திருச்சேறை சாரநாதர் வெள்ளி கருட வாகனம்.