முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் தூத்துக்குடி - கொழும்பு சரக்கு பெட்டக கப்பல் சேவை துவக்கம்

ஞாயிற்றுக்கிழமை, 22 ஜனவரி 2017      தூத்துக்குடி
Image Unavailable

தூத்துக்குடி.

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தின் டக்ஷன் பாரத் சரக்கு பெட்டக முனையத்தில் புதிதாக சரக்கு பெட்டக கப்பல் சேவை இன்று துவங்கியது

இது தொடர்பாக வ.உ.சி. துறைமுக பொறுப்புக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தின் டக்ஷன் பாரத் சரக்கு பெட்டக முனையத்தில்  21.01.2017முதல் புதிதாக துவக்கப்பட்டுள்ள சரக்கு பெட்டக கப்பல் சேவை கொழும்பு-கொச்சி- கொழும்பு - தூத்துக்குடி- கொழும்பு இடையே இயக்கப்படும். இச்சேவை எசியாடிக் நேப்டூன் (ASIATIC NEPTUNE) என்ற சரக்குபெட்டக கப்பல் பெங்கால் டைகர் லையன் நிறுவனத்தின் மூலமாக ஆண்டு ஒன்றுக்கு 40,000 டி.இ.யு சரக்கு பெட்டகங்களை கையாளும்.

இக்கப்பல் 1155 டி.இ.யு கொள்ளளவு கொண்டதாகவும். 7.8 மிதவை ஆழம் கொண்டதாகவும் இருக்கும். இச்சேவையை வ.உ.சிதம்பரனார் துறைமுக பொறுப்புக் கழக தலைமை இயந்திர பொறியாளர் (போக்குவரத்து) பி. ரவீந்திரன், மேலாளர் யு. ராஜேந்திரன், மற்றும் டக்ஷன் பாரத் சரக்கு பெட்டக முனையத்தின் மூத்த அதிகாரிகள் முன்னிலையில் துவக்கி வைத்தார். துவக்க விழாவில் அவர் பேசுகையில், 8வது சரக்கு பெட்டக தளத்தில் மேலும் பல சேவைகளை துவக்க வேண்டுமென்றும், மெயின் லையன் சேவைகளை இயக்க வேணடும். மேலும், டக்ஷன் பாரத் சரக்கு பெட்டக முனையத்தில் ஜீன் மாதம் 2017 முதல் அனைத்து சரக்கு பெட்டகங்கள் கையாளும் இயந்திரங்களுடன் இயங்கும் என்று தெரிவித்தார்.

2016-17 டிசம்பர் வரை டக்ஷன் பாரத் சரக்கு பெட்டக முனையத்தில் 74,204 டி.இ.யு கையாளப்பட்டுள்ளது. இத்தளத்தில் சரக்குபெட்டகம் கையாளும் திறன் 6 இலட்சம் டி.இ.யு.க்கள் ஆகும். இச்சரக்கு பெட்டக முனையத்தின் தற்காலிக சேவை 11.05.2015 முதல் துவக்கப்பட்டது. வ.உ.சிதம்பரனார் துறைமுக பொறுப்புக் கழகத் தலைவர் ஆனந்த சந்திர போஸ் இச்சேவை துவக்கியதற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும் அவர் துறைமுகம் அதிகளவில் சரக்கு பெட்டகங்களை கையாளுவதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருவது மட்டுமல்லாமல் எளிமையான முறையில் துறைமுகத்தின் வாயிலாக வர்த்தகத்தினை பெருக்குவதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது என்று கூறிப்பிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago