கள்ளக்குறிச்சியில் மாணவர்கள் அமைப்பின் சார்பில் 5ம் நாள் போராட்டம்

ஞாயிற்றுக்கிழமை, 22 ஜனவரி 2017      புதுச்சேரி
22K1FOTO

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி நகருக்கு உட்பட்ட பகுதியில் 4ம் நாளாக மாணவர்கள், இளைஞர்கள் இரவில் மழை, பனியினை கூட பொருட்படுத்தாமலும் கள்ளக்குறிச்சியில் தியாகதுருகம் சாலையில் உள்ள எல்.ஐ.சி அலுவலகம் முன்பாக தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடபட்டனர்.

ஜல்லிகட்டு தடையின்றி நிரந்தராமக நடைபெற வேண்டும், பீட்டாவை தடை செய்ய கோரியும், வனவிலங்குகள் பட்டியலிலிருந்து காளைகளை நிரந்தரமாக நீக்கக் கோரியும் பள்ளி,கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், மாணவிகள், பெற்றோர்கள், குழந்தைகள் பொது மக்கள் சார்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  மாணவர்கள் பனியினைகூட பொருட்படுத்தாமல் உட்கார்ந்து உள்ளனர்.

 ஆண்கள் பெண்கள், மாணவர்கள், சிறுவர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலரும் அச்சிட்ட பதாகைகளை ஏந்தியவாறும், கேஷமிட்டவாரும் ஆர்ப்பாட்ட திடலுக்கு வந்தனர் மாணவர்களை அவரை கைதட்டி வரவேற்றனர். ஞாயிற்றுக்கிழமை என்பதால் அதிகப்படியானோர் பங்கேற்றனர்.  அதே போல் கள்ளக்குறிச்சி மந்தைவெளி திடலில் அப் பகுதி மாணவர்கள் தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.   அதே போல் சின்னசேலம் பேருந்து நிலையம் அருகே அப் பகுதி மாணவர்கள் தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.   அதே போல் தியாகதுருகம் பேருந்து நிலையம் அருகே அப் பகுதி மாணவர்கள் தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.அதே போல் கச்சிராயப்பாளையத்திலும் அப் பகுதி மாணவர்கள் தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: