சேலம் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: கலெக்டர் வா.சம்பத், தலைமையில் நடைபெற்றது

திங்கட்கிழமை, 23 ஜனவரி 2017      சேலம்
2

சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்  கலெக்டர் வா.சம்பத், தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து வரப்பெற்ற பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு கலெக்டர்    தெரிவித்ததாவது.தமிழக அரசு மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்பான முறையில் செயல்படுத்தி வருகிறது. தமிழக அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்கள் பொதுமக்களை விரைந்து சென்றடைய பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் பொதுமக்களின் குறைகளை கேட்டு உடனடி நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.இன்றைய குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 5 மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகைக்கான ஆணை வழங்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் பொதுமக்களிடமிருந்து மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, உதவி உபகரணங்கள், கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா, சாதிச்சான்று, வேலைவாய்ப்பு, வங்கிக்கடன்கள், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 245 மனுக்கள் வரப்பெற்றுள்ளது. இந்த மனுக்களை  தொடர்புடைய அலுவலர்களுக்கு வழங்கி உடனடி தீர்வுகான உத்தரவிடப்பட்டது. என கலெக்டர் வா.சம்பத்,  தெரிவித்தார்.முன்னதாக 62 வது தேசிய விளையாட்டு குழுமம் சார்பில் மைசூரில் 14 மற்றும் 17 வயதிற்குட்டபட்ட பள்ளி மாணவ, மாணவிகள் புல்வெளி டென்னிஸ் போட்டி 17.01.2017 முதல் 21.01.2017 வரை நடைபெற்றது. இப்போட்டியில் தமிழக அணி சார்பாக சேலம் மாவட்டத்தை சேர்ந்த 14 வயதிற்குட்பட்ட மாணவியர் குழுவினர் தேசிய அளவில் சாம்பியன் பட்டம் பெற்றனர். 17 வயதிற்குட்பட்ட மாணவர் குழுவினர் 3 வது இடத்தை பெற்று வெற்றி பெற்றனர். தேசிய அளவில் சாம்பியன் பெற்ற மாணவ, மாணவியர்கள் கலெக்டர் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.இக்கூட்டத்தில் துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) ரவிக்குமார், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் தங்கமணி வட்டாட்சியர்கள் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: