முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிருஷ்ணகிரி நீர்;த்தேக்கத்திலிருந்து - இடது மற்றும் வலதுபுற பிரதான கால்வாய்களில் பாசனத்திற்காக 42 நாட்களுக்கு தண்ணீர்: கலெக்டர் சி.கதிரவன் திறந்து வைத்தார்

திங்கட்கிழமை, 23 ஜனவரி 2017      கிருஷ்ணகிரி
Image Unavailable

கிருஷ்ணகிரி வட்டம், கிருட்டிணகிரி நீர்த்தேக்கத்திலிருந்து வலது மற்றும் இடதுபுற பிரதான கால்வாய்களில் இரண்டாம் போக பாசனத்திற்காக விவசாய பெருமக்களின் கோரிக்கையினை ஏற்று 9012 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும் வகையில் 2017-ம் ஆண்டு ஜனவரி மாதம் 23-ம் தேதி முதல் 2017-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 5-ஆம் தேதி வரை 42 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட  முதலமைச்சர் அவர்களால் ஆணையிடப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி நீர்த்தேக்கத்தில் தற்பொழுது உள்ள நீர் அளவினை கொண்டும் எதிர்வரும் பருவமழையினால் வரும் நீர் வரத்தினை எதிர்நோக்கியும் கிருஷ்ணகிரி அணையிலிருந்து வலதுபுற கால்வாய் மூலம் வினாடிக்கு 87 கனஅடி வீதமும், இடதுபுற கால்வாய் மூலம் வினாடிக்கு 93 கனஅடி வீதமும் ஆக மொத்தம் 180 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதன் மூலம் கிருஷ்ணகிரி வட்டத்தில் உள்ள பின்வரும் 16 ஊராட்சிகளில் உள்ள பல்வேறு கிராமங்களில் உள்ள நஞ்சை நிலம் பாசன வசதி பெறுகிறது.விவசாயத்திற்கு மக்கள் நீரினை சிக்கனமாக பயன்படுத்தி அதிக மகசூல் பெற வேண்டும் என்றும், நீர் பங்கீட்டு பணிகளில் பொதுப்பணித்துறையினருக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. அறிவிக்கப்பட்ட தேதிக்கு பிறகு எக்காரணத்தை கொண்டும் பாசனத்திற்கு கால நீட்டிப்பு செய்து தண்ணீர் வழங்கப்படமாட்டாது என கலெக்டர் சி.கதிரவன்  தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட பால்உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத் தலைவர் தென்னரசு, செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியன், உதவி செயற்பொறியாளர் சாம்ராஜ், உதவி பொறியாளர் கார்திகேயன், வட்டார வேளாண்மை அலுவலர் சரவணன், முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவர் ஜமுனாகிருஷ்ணன், பாசன விவசாயிகள் மாரியப்பன், சிவராஜ் மற்றும் விவசாயிகள், அரசு அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்