முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாழவச்சனூரில் மர்ம காச்சலுக்கு இரு குழந்தைகள் பலி:மருத்துவ குழு முகாம்

திங்கட்கிழமை, 23 ஜனவரி 2017      திருவண்ணாமலை
Image Unavailable

திருவண்ணாமலை அடுத்த வாழவச்சனூரில் திடீரென ஏற்பட்ட மர்ம காச்சலுக்கு இரு குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். அப்பகுதியில் மருத்துவர் குழு தொடர் சிகிச்சையில் ஈடுபட்டு வருகினறனர். வாழவச்சனூர் பகுதியில் திடீரென கடந்த 7ந் தேதி முதல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மர்ம காச்சலால் பாதிக்ப்பட்டனர். அவர்கள் வாணாபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்தனர். இதனை தொடர்ந்து வாணாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் தினசரி வாழவச்சனூரில் முகாமிட்டு வீடுவீடாக சென்று இரத்த பரிசோதனை, கொசு மருந்து தெளித்தல்,தண்ணீர் தொட்டிகளை சுத்தம் செய்தல், வேண்டாத நீர் தேங்கி இருத்தலை அபபுறப்படுததுதல் என சுகாதார பணிகளை மேற்கொண்டும், மக்களுக்கு தூய்மை குறித்தும், காயச்சல் வராமல் தடுப்பது குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்தியும் வருகினறனர். இந்நிலையில் சிகிச்சை பலனிற்றி பானு(3),மற்றும் சாரதா(5) என்ற இரு குழந்தைகளும் மேல்சிகிச்ஞைக்காக திருவண்ணாமலை  மற்றும வேலூர் அரசு மருத்தவமனைக்கு எடுத்துச் சென்று அங்கு பரிதாபமாக உயிரிழந்தனர். கடந்த பத்து நாட்களில் அர்சனா(12), லலிதா(16), லஷ்மி(28), மகேஷ்வரன்(6), விக்னேஷ்(20), பிரபாஷ்(1) உள்ளிட்ட 33 பேர்களுக்கு காயச்சல் வந்து சிகிச்சை அளிக்கபபட்டுள்ளது. இதில் பாதி பேர்களுக்கு மேல் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். மேலும் தொடர் மருத்துவ முகாம் இப் பகுதியில் செயல்பட்டு வருகிறது. முற்றிலும் மர்ம காயச்சல் கட்டுக்குள் வரும் வரை மருத்துவ முகாம் செயல்பட உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்