ஈரோட்டில் ரூ. 33 லட்சம் வளர்ச்சிப் பணிகளுக்கு பூமிபூஜை எம்.எல்.ஏக்கள் பங்கேற்பு

திங்கட்கிழமை, 23 ஜனவரி 2017      ஈரோடு
23-1-17 erode boomi pusai

ஈரோடு கிழக்குத் தொகுதியில் ரூ. 33 லட்சம் மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளுக்காக பூமிபூஜை நிகழ்ச்சிகள்  நடைபெற்றன.இந்நிகழ்ச்சிகளை முன்னாள் அமைச்சரும், மாநகர் மாவட்ட அதிமுக செயலருமான கே.வி.இராமலிங்கம் எம்.எல்.ஏ. தொடக்கி வைத்தார்.எம்.எல்.ஏ. கே.எஸ்.தென்னரசு தலைமை வகித்தார்.ஈரோடு மாநகராட்சி 7-ஆவது வார்டு நஞ்சப்பா நகர் பகுதியில் உள்ள காலிங்கராயன் வாய்க்காலின் 3 இடங்களில் ரூ. 7 லட்சம் செலவில் படித்துறை கட்டவும், ஈஸ்வரன் கோயில், கஸ்தூரி அரங்கநாதப் பெருமாள் கோயில் முன்புறமுள்ள இடத்தில் ரூ. 8 லட்சம் செலவில் பிளாக் கற்களால் அடித்தளம் போடவும், ஸ்டோனி பாலம் அசோகபுரி ஆதி திராவிடர் மாணவர் விடுதி வளாகத்தில் ரூ. 6 லட்சம் செலவில் அங்கன்வாடி கட்டும் பணிக்கும், முனிசிபல்சத்திரம் பகுதியில் ரூ. 7 லட்சம் செலவில் புதிய ரேஷன் கடை கட்டடம் கட்டவும், ரூ. 5 லட்சம் செலவில் அசோகபுரம் நிழற்குடை திறப்பு விழா என மொத்தம் ரூ. 33 லட்சம் செலவில் வளர்ச்சிப் பணிகளுக்கான தொடக்க விழா நடைபெற்றது.  இதில்,மாவட்ட வருவாய் அலுவலர் ரெ.சதீஷ், துணை ஆணையர்கள் விஜயகுமார், அசோக்குமார்,சண்முக வடிவு, பகுதி செயலர்கள் கே.சி.பழனிசாமி, இரா.மனோகரன், கேசவமூர்த்தி, ஜெயராஜ்,முருகுசேகர்  அவைத்தலைவர் மீன்ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்: