ரயில் பாதையில் ஆண் சடலம் போலீசார் தீவிர விசாரணை

திங்கட்கிழமை, 23 ஜனவரி 2017      ஈரோடு

வெண்டிப்பாளையம் ரயில்வே பாதையில், அடையாளம் தெரியாத ஆண் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. ஈரோடு, வெண்டிப்பாளையம் மணக்காடு அருகே, ரயில் பாதையில், அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடப்பதாக, காசிபாளையம் வி.ஏ.ஓ நாட்ராயனுக்கு தகவல் கிடைத்தது. மொடக்குறிச்சி போலீசில் இதுகுறித்து புகார் கொடுத்தார். அதன்படி, அங்கு சென்ற போலீசார், 35 வயது மதிக்கத்தக்க ஆண் சடலத்தைக் கைப்பற்றினர். இறந்து சில நாட்கள் ஆனதால், அங்கேயே பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இறந்தவர் யார்? கொல்லப்பட்டாரா? ரயிலில் அடிபட்டு இறந்தாரா? என, போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

ஈரோட்டில்  முன்னாள் முதல்வருக்க உதவி வேளாண்மை அலுவலர் சங்கம் அஞ்சலி

ஈரோடு, ஜன.24-  தமிழ்நாடு உதவி வேளாண்மை அலுவலர் சங்க ஈரோடுமாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் எஸ். வெங்கடேசன் தலைமை தாங்கினார். முhநில தலைவர் எஸ். ஆ இசக்கி முத்து,,பொது செயலாளர்பாஸ்கரன் ஆகியோர் பேசினார்கள் கூட்டத்தில்  மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்துவது, ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தீர்வு காண்பது, நிரந்தரபயணப்படியை உதவிவேளாண்மை அலுவலர்களுக்க ரூ 3000 மாகவும்,உதவி விதை அலுவலர்களுக்கு ரூ4500 ஆகவும் உயர்த்தி வழங்க வேண்டும், புதிய பயிர்காப்பீடு திட்டம்குறித்து விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும், மேலும் இந்த திட்டத்தில் அலுவலர்களுக்க நிர்ணைக்கப்பட்டுள்ள இலக்கை தளர்த்த வேண்டும் உள்பட  பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. கூட்டத்தில்  மாநில மகளிர் அணிசெயலாளர் சர்மிளா, மாவட்ட துணை தலைவர் வீரத்தினேஷ்கர், பொருளாளர்சுதர்சன், அமைப்புசெயளாளர் வெங்கடேசன் உட்பட பலர்பங்கேற்றனர்

இதை ஷேர் செய்திடுங்கள்: