கிராம கோவில் பூசாரிகளுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி கலெக்டர் மு.கருணாகரன் துவக்கி வைத்தார்

திங்கட்கிழமை, 23 ஜனவரி 2017      திருநெல்வேலி
nellai pro

திருநெல்வேலி.

திருநெல்வேலியில், இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில், கிராமக் கோவில் பூசாரிகளுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி சிந்துபூந்துறை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் இன்று 23.01.2017 முதல் 27.01.2017 வரை ஐந்து தினங்களுக்கு நடைபெறவுள்ளது. பயிற்சி துவக்க நாள் நிகழ்ச்சி கலெக்டர்  மு.கருணாகரன்,  கலந்து கொண்டு பயிற்சியினை குத்து விளக்கேற்றி, துவக்கி வைத்தார்கள்.பின்னர், கலெக்டர்  பேசியதாவது-

கிராமப்புற கோவில் பூசாரிகளுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி இன்று துவக்கி வைக்கப்படுகிறது. தமிழக அரசு அனைத்து விதமான மக்களுக்கும் தேவையான நல்ல பலத்திட்டங்கள் தொடர்ந்து செய்து வருகிறது. கிராமப்புற பூசாரிகள் பல்வேறு கால நேரங்களில் பூஜை செய்து வருகின்றனர். முறையான பயிற்சிககளின் மூலம் ஆகமக விதிகளின் படி, விநாயகர், முருகன், சிவன், அம்மன், பெருமாள், சண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமிகளுக்கு திருக்கோவிலில் நடக்கூடிய பூஜைகளை ஆகமக விதிகளின்படி, நடத்துவது தொடர்பாக இப்பயிற்சிகள் வழங்கப்படுகிறது. இப்பயிற்சிகளுடன் பக்தர்களிடம் நடந்து கொள்ளக்கூடிய முறை, திருக்கோவிலை சுத்தமாக பராமரிக்கும் முறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும், கிராமப்புற பூசாரிகளுக்கு யோகா பயிற்சியும், மனநல மருத்துவரின் மூலம் பயிற்சிகளும் வழங்கப்படவுள்ளது. இப்பயிற்சிக்கு வருகைதந்துள்ள பூசாரிகளுக்கு ஊக்கத் தொகையாக ரூ.1000/-ம் வழங்கப்படுகிறது. நமது பாரம்பரிய பழக்கங்கள் பக்தியைச் சார்ந்தே உள்ளது. இதை பாதுகாப்பதற்கு பல்வேறு சட்டங்களும் உள்ளன. முறையாக பயிற்சி பெறும் நீங்கள் நமது சமுதாய பழக்க வழக்கங்களை பொதுமக்களுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்தி பாதுகாத்திடும் பணிகளை மேற்கொள்ள வேண்டுமென கலெக்டர்  மு.கருணாகரன்,  பேசினார்கள்.

இப்பயிற்சியில், இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் லெட்சுமணன், உதவி ஆணையர்கள் சாத்தையா, அன்னக்கொடி, பண்பொழி செல்வகுமாரி, சிந்துபூந்துறை சுந்தரேஸ்வரர் கோவில் செயல் அலுவலர் தேவி, மற்றும் செயல் அலுவலர்கள், இந்து சமய அறநிலையத் துறை அலுவலர்கள், பணியாளர்கள், கிராமப்புற பூசாரிகள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: