தூத்துக்குடியில் கடல்நீரை நன்னீராக்கும் திட்டத்தை செயல்படுத்த ஆர்வம் கலெக்டர் எம்.ரவி குமார் தகவல்

திங்கட்கிழமை, 23 ஜனவரி 2017      தூத்துக்குடி

தூத்துக்குடி.

தூத்துக்குடியில் உள்ள சில தொழிற்சாலைகள் கடல்நீரை நன்னீராக்கும் திட்டத்திற்கு அனுமதி கேட்டு விண்ணப்பித்து இருப்பதாக கலெக்டர் எம்.ரவி குமார் தெரிவித்தார்.இது தொடர்பாக கலெக்டர் செய்தியாளர்களிடம் கூறியதாவது :

தூத்துக்குடி மாவட்டத்தில் வறட்சி பகுதிகளை பார்வையிட எஸ்பி திவாரி, அழகேசன் ஆகியோர் தலைமையிலான மத்திய ஆய்வு குழு  தூத்துக்குடி வருகிறது. அவர்களுடன் தமிழக அரசு வறட்சி நிவாரண குழு இயக்குநர் தட்சிணாமூர்த்தி தலைமையிலான அதிகாரிகளும் வருகிறார்கள். தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள வறட்சி தொடர்பான புகைப்படங்களை பார்வையிடுகிறார்கள்.

24.தேதி இன்று காலை இக்குழுவினர் ஜெகவீரபாண்டியபுரம், கீழ இரால், சிந்தலக்கரை, அரியநாயகிபுரம் ஆகிய கிராமங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளை சந்திக்கிறார்கள். பின்னர் இக்குழு ராமநாதபுரம் செல்கிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட 261 பஞ்சாயத்து பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு 40 லிட்டர் குடிநீர் வழங்கப்பட உள்ளது.  வருகிற 24, 25, 26 ஆகிய தேதிகளில் கனமழை வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மழை பெய்தால், தண்ணீர் பிரச்சனையை சமாளிக்க முடியும். இல்லையெனில் குடிநீர் பிரச்சனையை தீர்ப்பதற்காக திருச்செந்தூர் காயல்பட்டினம், ஆறுமுகநேரி பகுதிகளில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்படும். தூத்துக்குடி ஸ்டெர்லைட், அனல்மின் நிலையம், ஸ்பிக், டாக், உட்பட பல தொழிற்சாலைகளை கடல்நீரை குடிநீரை மாற்றும் ஆலை அமைப்பதற்கு ஒப்பந்த அடிப்படையில் நிலம் கேட்டு விண்ணப்பித்துள்ளனர். இது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் எம்.ரவி குமார் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: