முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விஜய் மல்லையா கடன் மோசடி வழக்கு : ஐ.டி.பி.ஐ. வங்கியின் முன்னாள் தலைவர் கைது - சி.பி.ஐ. அதிரடி

செவ்வாய்க்கிழமை, 24 ஜனவரி 2017      வர்த்தகம்
Image Unavailable

 புதுடெல்லி  - தொழிலதிபர் விஜய் மல்லையா கடன் மோசடி வழக்கில்,  ஐ.டி.பி.ஐ.  வங்கியின் முன்னாள் தலைவர், கிங் ஃபிஷர் நிறுவன அதிகாரிகள் உட்பட 8 பேரை சி.பி.ஐ. அதிரடியாக கைது செய்துள்ளது.

தேடப்படும் குற்றவாளி:
தொழிலதிபர் விஜய் மல்லையா, வங்கிகளிடமிருந்து 9 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கடன்பெற்று அதனை திருப்பி செலுத்தாமல், லண்டனுக்கு தப்பி ஓடிவிட்டார். இதனையடுத்து, தேடப்படும் குற்றவாளியாக அவர் அறிவிக்கப்பட்டார். மேலும், ஜி.எம்.ஆர். ஹைதராபாத் சர்வதேச விமான நிலையத்துக்கு பணம் செலுத்த வேண்டிய வழக்கிலும் ஹைதராபாத் நீதிமன்றம் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து இருந்தது. அத்துடன் செக் மோசடி வழக்கிலும் ஹைதராபாத் நீதிமன்றம் விஜய் மல்லையாவுக்கு எதிராக 5 பிடிவாரண்ட்டுகளை பிறப்பித்திருக்கிறது.

அதிகாரிகள் 4 பேர் உட்பட 8 பேர் கைது :
இந்நிலையில், மல்லையா கடன் மோசடி வழக்கு தொடர்பாக, ஐ.டி.பி.ஐ வங்கியின் முன்னாள் தலைவர், அந்த வங்கியின் முன்னாள் அதிகாரிகள், கிங் ஃபிஷர் நிறுவன அதிகாரிகள் 4 பேர் உட்பட 8 பேரை சி.பி.ஐ. அதிரடியாக கைது செய்துள்ளது. முன்னதாக, பெங்களூருவில் உள்ள மல்லையாவுக்கு சொந்தமான யூபி குரூப் அலுவலகத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்