முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பணமதிப்பு நீக்க நடவடிக்கை டெபாசிட் செய்யப்பட்ட பணத்தில் கள்ள நோட்டுகள் இல்லை: ர்சர்வ் வங்கி

செவ்வாய்க்கிழமை, 24 ஜனவரி 2017      வர்த்தகம்
Image Unavailable

மும்பை  - பண மதிப்பு நீக்க நடவடிக்கையின்போது வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்ட பணத்தில் கள்ள நோட்டுகள் எதுவும் இல்லை என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.  மும்பையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர், 500 மற்றும் 1000 ரூபாய்கள் பண மதிப்பு நீக்க நடவடிக்கையின்போது வங்கிகளில் பெறப்பட்ட கள்ள நோட்டுகள் குறித்த விவரங்களைத் தகவல் அறியும் உரிமைச் சட்டம் வாயிலாகக் கேட்டிருந்தார்.

இதற்கு பதிலளித்த ஆர்பிஐ, ரூபாய் நோட்டு மதிப்பு நீக்க நடவடிக்கையின்போது டிசம்பர் 10.12. 2016 வரை வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்ட பணத்தில் கள்ள நோட்டுகள் எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளது.  முன்னதாக, நவம்பர் 8-ம் தேதி அன்று ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற பிரதமரின் அறிவிப்புக்கு முன்னால், நிபுணர்களோடு கலந்துரையாடல் நடத்தப்பட்டதா என்ற கேள்விக்கு ஆர்பிஐ பதிலளிக்க மறுத்துவிட்டது.  இதேபோல் தலைமை பொருளாதார ஆலோசகர், நிதியமைச்சர் ஆகியோருடன் பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு முன்னால் ஆலோசிக்கப்பட்டதா என்ற கேள்விக்கு பிரதமர் அலுவலகமும் பதில் கொடுக்க மறுத்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்