பாபநாசம் அணை நீர்மட்டம் மேலும் 4 அடி உயர்வு

செவ்வாய்க்கிழமை, 24 ஜனவரி 2017      திருநெல்வேலி

நெல்லை

 

வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நெல்லையில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. பாபநாசம் அணை நீர்மட்டம் மேலும் 4 அடி அதிகரித்துள்ளது.

 

வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நெல்லை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக மிதமான மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் பாபநாசம் அணைப்பகுதியில் கன மழை பெய்தது. இதனால் அணைக்கு நீர் வரத்து அதிகரித்தது. அணை நீர்மட்டம் ஒரே நாளில் 7 அடி உயர்ந்தது. இந்த நிலையில் இப்பகுதியில் லேசான மழையே பெய்தது.இதனால் அணைக்கான நீர்வரத்து பாதியாக குறைந்தது. இன்று காலை நிலவரப்படி இந்த அணைக்கு வினாடிக்கு 993 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்தது. அணையில் இருந்து 104 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. அணை நீர்மட்டம் நேற்று 28 அடியாக இருந்தது. இன்று இது மேலும் 3 அடி உயர்ந்து 31.30 அடியாக இருந்தது. இப்பகுதியில் 14 மில்லி மீட்டர் மழை பதிவானது.சேர்வலாறு அணை நீர்மட்டம் நேற்று 70.21 அடியாக இருந்தது. இன்று இது 72.97 அடியாகி உள்ளது. இங்கு 3 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 34.70 அடியாக இருக்கிறது. இங்கு 4.4 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. கடனா அணை நீர்மட்டம் 52 அடியாகவும், ராமநதி அணை நீர்மட்டம் 36.5 அடியாகவும், கருப்பாநதி அணை நீர்மட்டம் 44.62 அடியாகவும், குண்டாறு அணை நீர்மட்டம் 21.87 அடியாகவும், அடவிநயினார் அணை நீர்மட்டம் 65.75 அடியாகவும் உள்ளன.

 

இப்பகுதியில் கடனா அணையில் மட்டும் 2 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. மற்ற இடங்களில் மழை இல்லை. அணைப்பகுதி தவிர தாலுகா பகுதிகளில் அம்பையில் 6.4 மில்லிமீட்டர் மழையும், சேரன்மகாதேவியில் 1 மில்லிமீட்டர் மழையும் பதிவாகி இருக்கிறது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்: