முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வைகுண்டம் மூலவர் வைகுண்டபதி அவதார தினவிழாவில் கருடசேவை

செவ்வாய்க்கிழமை, 24 ஜனவரி 2017      தூத்துக்குடி
Image Unavailable

தூத்துக்குடி

 

ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான்சுவாமி கோவில் மூலவர் வைகுண்டபதி அவதார தினவிழாவில் கருடசேவை நடைபெற்றது.

 

தென்தமிழகமான ஸ்ரீவைகுண்டத்தில் தாமிரபரணி நதியின் கரையோரம் ஆன்மிக சிறப்புபெற்ற நவதிருப்பதி கோவில்கள் அமைந்துள்ளன. நவதிருப்பதிகளில் முதல் ஸ்தலமான ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் சுவாமி கோவிலின் மூலவர் வைகுண்டபதிக்கு தை மாதம் அனுச நட்சத்திர நாளில் அவதார தினவிழா பக்தர்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன்படி இந்தாண்டிற்கான மூலவர் வைகுண்டபதியின் அவதார தினவிழா நடைபெற்றது.விழாவினை முன்னிட்டு, அன்று காலை 7மணிக்கு விஸ்வரூபமும், காலை 9.30மணிக்கு பால் அபிஷேகமும் தொடர்ந்து திருமஞ்சனமும் நடைபெற்றது.அதனைத்தொடர்ந்து பகல் 11மணிக்கு உற்சவர் கள்ளபிரான் சுவாமி தாயார்கள் வைகுண்டநாயகி, சோரநாதநாயகி, ஸ்ரீதேவி, பூதேவி ஆகியோருடன் சயனகுறட்டிற்கு எழுந்தருளினார். அங்கு அவருக்கு சிறப்பு திருமஞ்சனம், தீபாரதனையும், மதியம் 1மணிக்கு நாலாயிர திவ்யபிரபந்த சாத்துமுறை கோஷ்டியும் நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.அதனைத்தொடர்ந்து, மாலை 6மணிக்கு மூலவர் வைகுண்டபதிக்கு வருடத்திலே அன்று ஒருநாள் மட்டும் உற்சவர் அணிந்துகொள்ளும் அனைத்து திருஆபரணங்களும் அணிவிக்கப்பட்டு, சிறப்பு தீபாரதணைகளுடன் கூடிய வழிபாடுகள் நடைபெற்றது. அதன்பின்பு உற்சவர் கள்ளபிரான்சுவாமி கருடவாகனத்திற்கு எழுந்தருளி தேர் ரதவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.இதில், கோவில் நிர்வாக அதிகாரி கார்த்திக், ஆய்வாளர் ரவிச்சந்திரன், ஸ்தலத்தார்கள் ஸ்ரீனிவாசன், ராஜப்பாவெங்கடாச்சாரி, சீனிவாசன், உபயதாரர் வழக்கறிஞர் சந்திரசேகர், முன்னாள் அறங்காவலர் குழுத்தலைவர் வீரபாண்டி, வழக்கறிஞர் கருப்பசாமி மற்றும் பக்தர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்