முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வறட்சி நிலை பயிர் சேதம் குறித்து மத்திய குழுவின் உறுப்பினர்கள் விஜய் ராஜ்மோகன் , சந்தோஷ் ஆய்வு

செவ்வாய்க்கிழமை, 24 ஜனவரி 2017      நாமக்கல்
Image Unavailable

நாமக்கல் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை குறைந்து விட்டது. இதன்  காரணமாக  நாமக்கல் மாவட்டத்தில் ஏற்பட்ட வறட்சியால் வேளாண்பயிர்கள் பாதிக்கப்பட்டது குறித்த மத்திய குழுவின் ஆய்வு  நடைபெற்றது. மத்திய குழுவின் உறுப்பினர் ஃ வணிகம், வறட்சி மேலாண்மை மற்றும் வேளாண்மைத்துறையின் இயக்குநர் விஜய் ராஜ்மோகன் , மத்திய குழுவின் உறுப்பினர் ஃ குடிநீர் மற்றும் சுகாதாரத்துறை உதவி ஆலோசகர் சந்தோஷ்  ஆகியோரும் தமிழக அரசின் சார்பில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் தீரஜ்குமாhர்  ஆகியோர் நாமக்கல் மாவட்ட கண்காணிப்பு அலுவலர்  மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அரசு முதன்மை செயலர் முகம்மது நசிமுதீன்  மற்றும் நாமக்கல் கலெக்டர் மு.ஆசியா மரியம்  ஆகியோர் முன்னிலையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.நாமக்கல் வட்டம், இராசாம்பாளையத்தில் கவின் கௌசிக், ஆகியோர் 0.40 ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்திருந்த 78 தென்னை மரங்களும், கார்த்திக், கௌதம் ஆகியோர் 0.30 ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்திருந்த 90 தென்னை மரங்களும், நீரின்றி காய்ந்துள்ளதையும், இராசிபுரம் வட்டம் சிங்காளந்தபுரத்தில் மல்லிகேஸ்வரன் என்பவர் 1.80 ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்திருந்த பருத்திச்செடிகள் நீரின்றி காய்ந்துள்ளதையும், இராசிபுரம் வட்டம், போடிநாய்க்கன்பட்டியில் ரங்கசாமி என்பவர் 0.40 ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்திருந்த வெங்காயப்பயிர்கள் நீரின்றி காய்ந்துள்ளதையும், மேலும் சண்முக சுந்தரம் என்பவர் 3 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்திருந்த மரவள்ளி நீரின்றி காய்ந்துள்ளதையும் மத்திய குழுவின் உறுப்பினர் ஃ வணிகம், வறட்சி மேலாண்மை மற்றும் வேளாண்மைத்துறையின் இயக்குநர் விஜய் ராஜ்மோகன் , மத்திய குழுவின் உறுப்பினர் ஃ குடிநீர் மற்றும் சுகாதாரத்துறை உதவி ஆலோசகர் சந்தோஷ்  ஆகியோரும் தமிழக அரசின் சார்பில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் தீரஜ்குமாhர்  ஆகியோர் நாமக்கல் மாவட்ட கண்காணிப்பு அலுவலர்  மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அரசு முதன்மை செயலர் முகம்மது நசிமுதீன்  மற்றும் நாமக்கல் கலெக்டர் மு.ஆசியா மரியம்  ஆகியோர் முன்னிலையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது விவசாயிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டதோடு, அவர்களின் குறைகளையும் வறட்சி பாதிப்பினால் ஏற்பட்டுள்ள பயிர் பாதிப்புகள் குறித்தும் கேட்டறிந்தனர். அப்போது மத்திய குழுவின் உறுப்பினர்  வணிகம், வறட்சி மேலாண்மை மற்றும் வேளாண்மைத்துறையின் இயக்குநர் விஜய் ராஜ்மோகன்  செய்தியாளர்களிடம் பேசும் போது தெரிவித்ததாவது, நாமக்கல் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை குறைவின் காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து வறட்சி பாதிப்பு மத்திய ஆய்வுக்குழுவின் உறுப்பினர்கள் இணைந்து மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்ததோடு, விவசாயிகளை நேரில் சந்தித்து, அவர்களிடம் கோரிக்கை மனுக்கள் பெற்றுக்கொள்ளப்பட்டு, அவர்களின் குறைகளையும் கேட்டறியப்பட்டது. நாமக்கல் மாவட்டம், வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதை குறித்த ஆய்வு முடிக்கப்பட்டு, அதற்கான ஆய்வு அறிக்கை மத்திய அரசால் நியமிக்கப்பட்டுள்ள வறட்சி குறித்த ஆய்வுக்குழுவில் ஒரு வார காலத்திற்குள் சமர்ப்பிக்கப்படும். இவ்வாறு மத்திய குழுவின் உறுப்பினர்  வணிகம், வறட்சி மேலாண்மை மற்றும் வேளாண்மைத்துறையின் இயக்குநர் விஜய் ராஜ்மோகன்  தெரிவித்தார். இந்த ஆய்வின் போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சு.மகேஸ்வரன், மாவட்ட வருவாய் அலுவலர் கு.பழனிச்சாமி, வேளாண்மைத்துறையின் இணை இயக்குநர் ஆர்.கலியராஜ், வருவாய் கோட்டாட்சியர்கள், ஜி.மகாத்மா, மா.இராஜசேகரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) லோகநாத பிரகாசம், நாமக்கல் வட்டாட்சியர் சுகுமார், இராசிபுரம் வட்டாட்சியர் சந்திர மாதவன்,  வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை மற்றும் வருவாய்த்துறை உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள், விவசாயிகள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்