கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வறட்சி பாதித்த பகுதிகளை மத்திய கண்காணிப்பு குழுவினர் நேரில் ஆய்வு

செவ்வாய்க்கிழமை, 24 ஜனவரி 2017      கிருஷ்ணகிரி
3 0

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பர்கூர் வட்டத்திற்குட்பட்ட சிவம்பட்டி, நடுப்பட்டி, போச்சம்பள்ளி வட்டத்திற்குட்பட்ட  பட்ரஅள்ளி, ஓலைபட்டி,  ஊத்தங்கரை வட்டத்திற்குட்பட்ட தாசம்பட்டி  உள்ளிட்ட பகுதிகளில் வறட்சி பாதிப்பு குறித்து மத்திய குழுவினர்; ஆய்வு மேற்கொண்டார்கள்.இந்த ஆய்வின்போது மத்திய வேளாண்மை ஆராய்ச்சி அலுவலர் மருத்துவர்.பி. கணேஷ்ராம், மத்திய நீர்வள ஆதார அமைப்பின் அலுவலர் ரத்தினபிரசாத், மத்திய கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை அதிகாரி டாக்டர்.பால்பாண்டியன் ஆகிய குழுவினர், மாநில சமூக பாதுகாப்பு திட்ட  ஆணையாளர் சி.என். மகேஷ்வரன் இ.ஆ.ப. கிருஷ்ணகிரி கலெக்டர் சி.கதிரவன்  ஆகியோர் முன்னிலையில்  மத்திய கண்காணிப்பு குழுவினர்   வறட்சி பகுதிகளை பார்வையிட்டனர். அப்பொழுது பர்கூர் வட்டம்  சிவம்பட்டி கிராமத்தை சேர்ந்த கோவிந்தன் என்ற விவசாயி தன்னுடைய 1 ஏக்கர் நிலத்தில் துவரை மற்றும் நிலக்கடலை சாகுபடி செய்துள்ளதையும்,  நடுப்பட்டி கிராமத்தை சேர்ந்த எம்.ஜி.ராமலிங்கம் என்ற விவசாயி தன்னுடைய நிலத்தில் 4 - ஏக்கரில் 2 ஏக்கர் துவரை மற்றும் 2 ஏக்கர் நிலத்தில் நிலக்கடலை சாகுபடி செய்துள்ளதையும், போச்சம்பள்ளி வட்டத்திற்குட்டபட்ட ஓலைபட்டி கிராமத்தில் கூட்டு பட்டாவில் பெருமாள் மற்றும் பழனி ஆகியோர் தங்களுடை  5 ஏக்கர் பரப்பில் பச்சை பயிறு சாகுபடி செய்துள்ளதையும்,   ஊத்தங்கரை வட்டத்திற்குட்பட்ட தாசம்பட்டி கிராமத்தை சேர்ந்த  தீர்தம்மா என்ற விவசாயி 1 .60 ஏக்கர் நிலத்தில் துவரை மற்றும் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளதையும்  நேரில் பார்வையிட்ட மத்திய வறட்சி நிவாரண குழுவினர் விவசாயிகளிடம்  துவரை, பச்சைபயிறு, பருத்தி,  நிலகடலை ஆகிய பயிர்களை சாகுபடி செய்யப்பட்ட விவரங்கள் மற்றும் பயிரிட செய்த செலவுகள் குறித்தும் தற்போது வறட்சியால் பாதிக்கப்பட்ட விவரங்கள் குறித்து கேட்டறிந்தனர்.   மேலும் பயிர் காப்பீடு செய்யப்பட்டுள்ளதா என்பதையும்,   கூட்டுறவு சங்களில் விவசாய கடன் பெற்றுள்ளார்களா என்ற  விவரங்களை கேட்டறிந்தார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்: