பல்லவன் பொறியியல் கல்லூரியில் ஒரு நாள் பயிலரங்கு

செவ்வாய்க்கிழமை, 24 ஜனவரி 2017      காஞ்சிபுரம்
kanchi 1

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மாவட்டம் திம்மசமுத்திரம் பல்லவன் பொறியியல் கல்லூரியில் ஆராய்ச்சி கட்டுரைகள் எழுதுவது மற்றும் ஆராய்ச்சிதிட்டங்களுக்கான திட்டமதிப்பீடு சமர்ப்பித்தல் பற்றிய ஒரு நாள் பயிலரங்கு நடைபெற்றது. இப்பயிலரங்கில் பல்லவன் பொறியியல் கல்லூரியின் நிறுவனர் மற்றும் தலைவர் ‘கலைமாமணி’  முனைவர் வி.முத்து தலைவர்இ புதுவை தமிழ்ச்சங்கம் தலைமை வகித்தார். பல்லவன் பொறியியல்  கல்லூரியின் நிறுவனர் மற்றும் செயலாளர் கே.ஆர்.சீதாபதி முன்னிலை வகித்தார். பல்லவன் பொறியியல் கல்லூரி முதல்வர்முனைவர்சி. கோபிநாத் பயிலரங்கின் நோக்கங்கள் பற்றி விளக்கினார்.

இப்பயிலரங்கின் முதல் அமர்வின்; சிறப்பு விருந்தினர் முனைவர் ஆர்.ரமேஷ், இணைப்பேராசிரியர், அண்ணா பல்கலைக்கழகம் அவர்கள் ஆராய்ச்சியில் ஈடுபட விரும்பும் மாணவர்களுக்கு தங்களுக்கேற்ற துறைகளை தேர்ந்தெடுப்பது, தகவல்களை திரட்டுவது, கட்டுரையாக வடிவமைப்பதுப் பற்றி பயிற்சி அளித்தார். இரண்டாவது அமர்வின்; சிறப்பு விருந்தினர் சங்கரா பல்கலைக்கழக இணைப்பேராசிரியர், முனைவர்; கே.சிவக்குமார், ஆராய்ச்சிக்கட்டுரைகளை சமர்ப்பிக்கும் தரமான சஞ்சிகைகளை தேர்ந்தெடுப்பது பற்றி விளக்கினார். மூன்றாவது அமர்வின்; சிறப்பு விருந்தினர் அண்ணா பல்கலைக்கழகம் மெட்ராஸ் தொழில்நுட்ப பயிலக இணைப்பேராசிரியர் முனைவர் ஜி.பி.பாஸ்கர், பல்கலைக்கழக மானியக்குழு, அகில இந்திய தொழில்நுட்பக்கழகம், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழகம், அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி மையம், அறிவியல் மற்றம் தொழில்நுட்பத்துறை புதுடெல்லி, தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்பக்கழகம், சென்னை போன்ற நிறுவனங்களிடமிருந்து ஆராய்ச்சி திட்டங்களுக்கு நிதி உதவி பெற திட்ட மதிப்பீடு தயார் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் பற்றிய பயிற்சிகளை அளித்தார்.

இப்பயிலரங்கின்பயிலரங்கில் கலந்துகொண்ட ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு பல்லவன் பொறியியல் கல்லூரியின் நிறுவனர் மற்றும் செயலாளர் கே.ஆர்.சீதாபதி மற்றும் மெட்ராஸ் தொழில்நுட்ப பயிலக இணைப்பேராசிரியர் முனைவர் ஜி.பி.பாஸ்கர், சென்னை மற்றும் கல்லூரி முதல்வர் சி.கோபிநாத் ஆpகயோர் சான்றிதழ்களை வழங்கினா.;

இப்பயிலரங்கில் 300-க்கும் மேற்பட்ட முதுகலை, ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் பங்குபெற்றனர். இப்பயிலரங்கில் அறிவியல் மற்றும் மானுடவியல் துறைத்தலைவர் முனைவர் ஆர்.ரவிக்குமார் வரவேற்புரை ஆற்றினார். இயந்திரவியல் துறை  இணைப்பேராசிரியர் கே.சிவக்குமார், நன்றியுரையாற்றினார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: