ஊட்டியில் நாளை குடியரசு தின விழா கலெக்டர் சங்கர் தேசிய கொடியை ஏற்றி நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்

செவ்வாய்க்கிழமை, 24 ஜனவரி 2017      நீலகிரி

குடியரசு தின விழாவையொட்டி ஊட்டியில் நாளை நீலகிரி மாவட்ட கலெக்டர் முனைவர் பொ.சங்கர் இந்திய தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தி நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

இந்திய குடியரசு தின விழா நாடு முழுவதும் நாளை(26_ந் தேதி) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

                                 கொடியேற்றுகிறார்

அதேபோல் நீலகிரி மாவட்டத்தில் நாளை காலை 10.00 மணிக்கு ஊட்டி அரசினர் தாவரவியல் பூங்கா சாலையில் அமைந்துள்ள மலைப்பகுதி மேம்பாட்டுத் திட்ட திறந்தவெளி விளையாட்டு மைதானத்தில் குடியரசு தின விழா நிகழ்ச்சியில் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் நீலகிரி மாவட்ட கலெக்டர் முனைவர் பொ.சங்கர் கலந்து கொண்டு இந்திய தேசியக் கொடியினை ஏற்றிவைத்து, காவலர்கள், ஊர்காவல்படை, ரெட்கிராஸ், என்.சி.சி.மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்கிறார்.

             நலத்திட்ட உதவிகள்

தொடர்ந்து சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு சிறப்பு செய்து கௌரவித்து, அரசின் பல்வேறு துறைகள் மூலம் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்குகிறார். அதன் பின்னர் பள்ளி மாணவ, மாணவியர்களின் கலைநிகழ்ச்சிகள் மற்றும் பழங்குடியின மக்களின் பாரம்பரிய நடனங்கள் நடைபெறுகின்றன. எனவே சுதந்திர தின விழா நிகழ்ச்சிகளில் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு விழாவினை சிறப்பிக்குமாறு மாவட்ட வருவாய் அலுவலர் தெ.பா”ஸ்கர பாண்டியன் அழைப்பு விடுத்துள்ளார்.

                       பாதுகாப்பு

மேலும் குடியரசு தின விழாவினையொட்டி அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கும் வகையில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் முரளி ரம்பா உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் சுற்றுலாப் பயணிகள் போர்வையில் தீவிரவாதிகள் யாரேனும் ஊடுறுவி உள்ளனரா என்ற கோணத்தில் ஊட்டியில் லாட்ஜ்கள், காட்டேஜ்கள், ஓட்டல்களில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். குடியரசு தினவிழா நடைபெறும் மலைப்பகுதி மேம்பாட்டுத் திட்ட மைதானம் போலீசார் தீவிர கண்காணிப்பில் இருந்து வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்: