குடியரசு தினத்தன்று மதுபான கடைகளுக்கு விடுமுறை

செவ்வாய்க்கிழமை, 24 ஜனவரி 2017      ஈரோடு

,ஈரோடு மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது–ஈரோடு மாவட்டத்தில் வருகிற 26–ந் தேதி (வியாழக்கிழமை) குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் அன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. அதனால் அன்றைய தினம் டாஸ்மாக் மதுபான கடைகள், அவற்றுடன் இணைந்த பார்கள் மற்றும் கிளப்கள், ஓட்டல் பார் உரிமத்தலங்கள் ஆகியவை மூடப்பட்டு இருக்கும். மதுபான விற்பனைகள் ஏதும் அன்று நடைபெறாது.

இதை ஷேர் செய்திடுங்கள்: