ஈரோடு மாவட்டத்தில்,225 கிராம பஞ்சயத்துகளில் 26ம் தேதி கிராமசபை

செவ்வாய்க்கிழமை, 24 ஜனவரி 2017      ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில், 225 கிராம பஞ்சயத்துகளிலும், 26ல் குடியரசு தினத்தன்று, கிராமசபை கூட்டம் நடக்கிறது. டெங்கு காய்ச்சல் தடுப்பு, திறந்த போர்வெல்களை கண்டறிந்து விபத்துக்களை தவிர்க்க நடவடிக்கை எடுத்தல், மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு உருவாக்குதல், தூய்மை பணி மேற்கொள்ளுதல், திடக்கழிவு மற்றும் திரவக்கழிவு மேலாண்மை, மரக்கன்றுகளை நடுதல், சீமை கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுத்தல் உள்ளிட்ட பணிகள் குறித்து, ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. பொதுமக்கள் பங்கேற்க, கலெக்டர் பிரபாகர் கேட்டு கொண்டுள்ளார்

இதை ஷேர் செய்திடுங்கள்: