இன்ஜின் கோளாறால் தீ விபத்து குழந்தைகள் உட்பட ஐவர் தப்பினர்

செவ்வாய்க்கிழமை, 24 ஜனவரி 2017      ஈரோடு

மொடக்குறிச்சி அருகே, ஓடும் காரில் திடீரென தீப்பிடித்தது. குழந்தைகள் உட்பட, ஐந்து பேர் உயிர் தப்பினர். நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத்தை அடுத்த கோரைக்காட்டுபள்ளம், எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்தவர் சக்ரவர்த்தி, 28 இவர் நண்பர் சுப்பிரமணி. இவர் மனைவி ரூபி, 26 இவர்களுக்கு, 10 மற்றும் ஆறு வயதில் இரு குழந்தைகள் உள்ளனர். திருப்பூர் மாவட்டம் முத்தூரில், ரூபியின் வீடு உள்ளது. சக்ரவர்த்திக்கு சொந்தமான, போர்டு ஐகா காரில், நேற்று முன்தினம் முத்தூர் சென்றனர். பின்னர் இரவில் வீடு திரும்பினர். காரை சக்கரவர்த்தி ஓட்டினார். ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சியை அடுத்த, ஆவாரங்காட்டு வலசு பகுதியில் கார் வந்தது. அப்போது திடீரென இன்ஜின் கோளாறால், திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. காரை உடனடியாக நிறுத்திய சக்ரவர்த்தி, குழந்தைகள் உட்பட அனைவரையும் வெளியேற்றினார். மொடக்குறிச்சி தீயணைப்பு நிலைய வீரர்கள், தீயை அணைத்தனர். ஆனாலும், காரின் முன்பகுதி எரிந்து சேதமாகி விட்டது. சமயோசிதமாக டிரைவர் செயல்பட்டதால், உயிர் சேதம் தவிர்க்கப்பட்டதாக, போலீசார் தெரிவித்தனர்

இதை ஷேர் செய்திடுங்கள்: