முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நத்தத்தில் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு ஊர்வலம்

செவ்வாய்க்கிழமை, 24 ஜனவரி 2017      திண்டுக்கல்
Image Unavailable

நத்தம்- திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காந்திசிலை அருகில் தொடங்கி தேசிய வாக்காளர்கள் தின விழிப்புணர்வு மாணவர்கள் ஊர்வலம் நடந்தது. இதில் அவுட்டர்சாலை, மாரியம்மன் கோவில், மெயின்வீதி வழியாக மீண்டும்  ஊர்வலம் புறப்பட்ட இடத்திற்கே வந்து சேர்ந்தது. நத்தம் தாசில்தார் ராமையா தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். பேரூராட்சி செயல் அலுவலர் செல்வா, வருவாய் ஆய்வாளர் சுந்தரபாண்டியன், தேர்தல் பிரிவு அலுவலர் வில்சன், கிராம நிர்வாக அலுவலர்கள் முருகன், சுரேஷ் மற்றும் ஆசிரியர், ஆசிரியைகள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். சுமார் 400 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் கோஷங்களை எழுப்பி இதில் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்