முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருச்சி மாவட்டத்தில் மனிதநேய வாரவிழா : கலெக்டர் டாக்டர்.கே.எஸ்.பழனிசாமி\ துவக்கி வைத்தார்

செவ்வாய்க்கிழமை, 24 ஜனவரி 2017      திருச்சி

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் வட்டம், காட்டூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற மனித நேய வார விழாவை முன்னிட்டு முதல் நாள் நிகழ்ச்சியாக சிறப்பு புகைப்படக் கண்காட்சியினை மாவட்ட கலெக்டர் டாக்டர்.கே.எஸ்.பழனிசாமி நேற்று (24.01.2017) தொடங்கி வைத்தார்.

 

புகைப்பட கண்காட்சி

 

சிறப்பு புகைப்படக் கண்காட்சியை தொடங்கி வைத்து மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது:மனித நேயம் (மனித நேயம் ஸ்ரீ மனிதம் + நேயம்) தொடர்புடைய பலம் வாய்ந்த குணங்களான அன்பு, கருணை, இறக்கம் மற்றும் சமூக நுண்ணறிவு, சக மனிதர்களிடம் அன்பு காட்டுவதை மனித நேயம் எனக் கூறலாம். இதில் உயிரிறக்கப் பண்பு என்பது மனித நேயத்தில் முக்கிய இடம் வகிக்கிறது. பிறருக்கு துன்பம் அளிக்காமல் இருத்தல், இயலாதவர்களின் துன்பத்தைப் போக்குதல், இளகிய இதயமும், இரக்க சுபாவமும், உறுதியான செயல்பாடுகளும் கொண்டிருத்தல் என்றும் அந்த வகையில் ஒரு சமூக குழுவினரை ஏனைய சழுகக் குழுவினரோடு சம உரிமையோடு தொடர்புகளைப் பேணுவது மனித நேயமாகும்.

மாணவியர்கள் அனைவரும் நன்றாக படித்து 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற வேண்டும். அதிக மதிப்பெண் பெறுவதன் மூலம் உயர்க் கல்வியை நாம் தீர்மானிக்க முடியும். பட்டப் படிப்பு படித்து முடித்தவுடன் வேலைவயாப்பிற்கு உண்டான போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று நல்ல வேலையை தேர்ந்தெடுக்க வேண்டும். படிக்கும் காலத்தில் கூடுதலாக செய்தித் தாளை படிக்க வேண்டும். பொது அறிவு சார்ந்த புத்தகங்கள் படிக்க வேண்டும். அனைத்து மாணவியர்க்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என மாவட்ட கலெக்டர் டாக்டர்.கே.எஸ்.பழனிசாமி. தெரிவித்தார்.

 

துவக்கம்

 

 

முதல் நாளான இன்று ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையும், செய்தி மக்கள் தொடர்புத் துறையும் இணைந்து காட்டூர், அரசு ஆதிதிராவிடர் நல பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் புகைப்படக்கண்காட்சி தொடங்கி வைக்கப்பட்டது.

முதல் நாள் நேற்று(24.01.2017) புகைப்படக் கண்காட்சி தொடக்க விழாவில் பள்ளியில் படிக்கும் 12ம் வகுப்பு மாணவிகள் கே.பவித்ரப்பிரியா, எஸ்.வனிதா, ஆர்.சங்கரி, கே.உமா, ஆகியோர் தெரிவித்ததாவது:

எங்கள் பள்ளியில் ஆசிரியர்கள் மிக நன்றாக பாடம் நடத்துகிறார்கள். எங்களுடைய எதிர்கால நலனை கருத்தில்க் கொண்டு சிறப்பு வகுப்புகளும் நடத்துகிறார்கள். குறிப்பாக நீட் தேர்விற்கு சிறப்பு பயிற்சி வகுப்புகளும் நடத்தப்படுகிறது. எங்களுக்கு நல்ல நல்லொழுக்கங்களையும் எங்கள் ஆசிரியர்கள் கற்றுக்கொடுக்கின்றார்கள். எங்கள் பள்ளியில் சுகாதாரம் மற்றும் இயற்கையான சுழல் நன்றாக இருக்கிறது. ஆய்வுக்கூடம், பள்ளி வகுப்பறைகள் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. வரக்கூடிய 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் நாங்கள் கடந்த ஆண்டை விட இந்தாண்டு அதிக மதிப்பெண் பெற்று எங்கள் பள்ளிக்கு பெருமை சேர்ப்போம் என தெரிவித்தனர்.

இவ்விழாவில் மாவட்ட ஆதிதிராவிடரர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் இளங்கோ, திருவெறும்பூர் வட்டாட்சியர் ரெங்கராஜன், ஆதிதிராவிட பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை முனைவர்.சுமதி மற்றும் பள்ளி ஆசிரியைகள், ஏராளமான மாணவியர்கள் பங்கேற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்