முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாகப்பட்டினம் மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்தியக்குழு நேரில் ஆய்வு

செவ்வாய்க்கிழமை, 24 ஜனவரி 2017      நாகப்பட்டினம்
Image Unavailable

நாகப்பட்டினம் மாவட்டம்; தலைஞாயிறு வட்டாரத்தில் நீர்மூளை, கீழையூர் வட்டாரத்தில் திருவாய்மூர், கருங்கண்ணி – நாகப்பட்டினம் வட்டாரத்தில் பாலையூர் மற்றும் செம்பனார்கோயில் வட்டாரத்தில் காழியப்பநல்லூர் ஆகிய இடங்களில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மாவட்ட கலெக்டர் சு. பழனிசாமி, முன்னிலையில் தேசிய கூட்டுறவு வளர்ச்சி ஆணைய நிர்வாக இயக்குநர் வசுதாமிஸ்ரா, தலைமையில்; ஸ்ரீ தீனாநாத் ஆலோசகர் நிதி கமிஷன் பிரிவு, ஸ்ரீ ஸ்மீத் குமார் துணை இயக்குநர் மத்திய மின்சார ஆணையர், சத்தியகோபால், முதன்மைச் செயலாளர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் ஆகியோர் அடங்கிய மத்திய குழுவினர் நேற்று (24.01.2017) ஆய்வு செய்தார்கள்.

 

பயிர் சாகுபடி

 

நாகப்பட்டினம் மாவட்டத்தில் சம்பா மற்றும் தாளடி பருவத்தில் வளமையாக 1,34,500 ஹெக் பரப்பில் நெற்பயிர் சாகுபடி செய்யப்படும். காவிரி ஆற்றில் போதிய அளவு பாசன நீர் பெறப்படாத காரணத்தினாலும், போதிய அளவு வடகிழக்கு பருவ மழை பெய்யாத காரணத்தினாலும் நடப்பு ஆண்டு 1,30,101 ஹெக் பரப்பில் மட்டுமே நெல் பயிர் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் போதிய அளவு வடகிழக்கு பருவ மழை பெய்யாத காரணத்தினாலும், காவிரி ஆற்றில் போதிய அளவு பாசன நீர் பெறப்படாத காரணத்தினாலும் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள 11 வட்டாரங்களிலும் சாகுபடி செய்யப்பட்ட நெல் பயிர் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் 2673ஹெக் பரப்பில் 33 சதவீதத்திற்கு குறைவாகவும், 37120 ஹெக்டேர் பரப்பில் 33 முதல் 50 சதவீதம் பாதிப்பும் 90141 ஹெக் பரப்பில் 50 சதவீதத்திற்கு மேலும் நெல் பயிர் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது.

இக்குழுவினர் தலைஞாயிறு வட்டாரத்தில் நீர்மூளை, கீழையூர் வட்டாரத்தில் திருவாய்மூர், கருங்கண்ணி – நாகப்பட்டினம் வட்டாரத்தில் பாலையூர் மற்றும் செம்பனார்கோயில் வட்டாரத்தில் காழியப்பநல்லூர் ஆகிய இடங்களில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தார்கள். ஆய்வின்போது திருவாய்மூர் மற்றும் காழியப்பநல்லூர் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டிருந்த வறட்சி நிலவரம் குறித்த புகைப்பட கண்காட்சியையும், வறட்சியால் பல்வேறு நிலைகளில் பாதிக்கப்பட்ட பயிர் மாதிரிகளையும் பார்வையிட்டார்கள்.

ஆய்வின்போது மத்திய குழுவினர் விவசாயிகளிடம் கலந்துரையாடி வறட்சி நிலவரம் குறித்து கேட்டறிந்தார்கள்.

இவ்வாய்வின் போது மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் துரை, மாவட்ட வருவாய் அலுவலர் சி. முத்துமாரி, நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினர் கோபால், வருவாய் கோட்டாட்சியர் கண்ணன், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ. செல்வகுமார், இணை இயக்குநர் வேளாண்மை சேகர் மற்றும் வேளாண்மை துறை அலுவலர்கள், விவசாயிகள், அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்