முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சட்ட விழிப்புணர்வு முகாம்

செவ்வாய்க்கிழமை, 24 ஜனவரி 2017      திண்டுக்கல்
Image Unavailable

 திருவாடானை -      திருவாடானை அரசு மருத்துவமனையில் வட்ட சட்ட பணிகல் குழு சார்பில் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
          திருவடானை அரசு மருத்துவ மனையில் திருவாடானை வட்ட சட்ட பணிகள் குழு சார்பில் பெண்கள் சிசு கொலை தடுப்பது சம்மந்தமாக விழிப்புணர்வு முகாம் நீதித்ட்ஜுறை நட்வர் நீதி மன்ற நடுவர் கிறிஸ்டல் பபிதா தலைமையில் நடைபெற்ற முகாமில்  அரசு தலைமை மருதுவர் ராதாகிருஷ்ணன வரவேற்றார். வழக்கறிஞர் சிவராமன் முன்னிலைவகித்தார். இந்த
 விழிப்புணர்வு முகாமில் பேசிய நீதிபதி கிறிஸ்டல் பபிதா பேசுகையில் ட்யனியார் மருத்துவ மனியில் குழந்தைகள் விற்பனி அதிகரித்துள்ளது. தன் வேளைபார்த்த பொழுது ஒரு வழக்கில் வந்த பெண்மணி எனக்கு பிறந்த குழந்தையை விற்றுவிட்டார்கள். அதுகுறித்து விசாரித்த போது அந்த பெண்னிற்கு பிறந்த குழந்தையின் முகவரி தவறுதலாக அலுவலக குறிப்பில் வேரு ஒருவருடைய முகவரியை பதிந்து வைத்திருந்தார்கள். இப்படி தனியார் மருத்துவ மனைகள் பணத்திற்கு இவ்வாறான செயல்களை செய்கிறார்கள். இது தவறானது. சட்டத்திற்கு புறம்பானது.

நமது ஊரில் தண்ணீர் இல்லாமல் போனதுக்கு காரணம் காட்டு கருவேல மரங்களால்தான் எனவே காட்டு கருவேல மரங்களை ஒழிக்க உயர் நீதி மன்ற வழல்கில் என்னை பார்வையிட பணித்ததின் பேரில் போய் பார்த்தால் திருவாடானை தாலுகாவில் காட்டு கருவேல மரங்கள் இல்லாத இட்ங்களே இல்லை. எனவே நாமாக முன்வந்து காட்டு கருவேல மரங்களை ஒழிக்க வேண்டும். நெருங்கிய உறவனர்களில் திருமணம் செய்வதால் அதிக பாதிப்பு உள்ளது. இது  போன்ற விசயங்களை பொது மக்களிடம் தன்னார்வளர்கள்  கொண்டு சேர்க்க வேண்டும் என்று உரையாற்றினார். இந்த முகாமில் வழக்கறிஞர்கள் கண்ணன், தன்பால், ராம்குமார், ரமேஷ் சசிகுமார், மகாலிங்கம், கலா மற்றும் பலர் கலந்து கொண்டார்கள். இந்த விழிப்புணர்வு முகாமை வட்ட சட்ட பணிகள் குழு அலுவலர் சுப்பிரமணியன் ஏற்பாடு செருதிருந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்