முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தஞ்சாவூர் மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பயிர் சேதங்களை வசுதாமிஸ்ரா, தலைமையில் மத்தியக்குழு ஆய்வு

செவ்வாய்க்கிழமை, 24 ஜனவரி 2017      தஞ்சாவூர்

தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் வட்டம் கோயில்பத்து, தஞ்சாவூர் வட்டம் புதுப்பட்டிணம், ஒரத்தநாடு வட்டம் மேலஉளுர், பட்டுக்கோட்டை வட்டம் சொக்கனாவூர் ஆகிய கிராமங்களில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாய பயிர்களை தேசிய கூட்டுறவு மேம்பாட்டு கழக மேலாண்மை இயக்குநர் வசுதாமிஸ்ரா, தலைமையில் முதன்மை செயலாளர்ஃவருவாய் நிர்வாக ஆணையர் டாக்டர் கே..சத்தியகோபால் , மாவட்ட கலெக்டர் ஆ.அண்ணாதுரை, முன்னிலையில் நேற்று (24.01.2017) பார்வையிட்டு விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தனர்.

 

சம்பா சாகுபடி பயிர்

 

தஞ்சாவூர் மாவட்டத்தில் காவிரி தண்ணீர் நம்பி விவசாயிகள் விவசாய பயிர்கள் செய்து வருகின்றனர். சம்பா பயிர் சாகுபடி செய்ய தமிழக அரசு மேட்டுர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட்டது. அணையில் போதிய அளவு தண்ணீர் இல்லாததாலும், இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவ மழை பொய்த்துள்ளதாலும், விவசாயிகள் பயிரிடப்பட்டுள்ள பயிர்கள் வறட்சியால் கருகியுள்ளது. இப்பயிர்களை பார்வையிடுவதற்காக மத்தியக் குழு வசுதாமிஸ்ரா, , தமிழக அரசு முதன்மை செயலாளர்ஃவருவாய் நிர்வாக ஆணையர் டாக்டர் கே.சத்தியகோபால், , ஆலோசகர், நிதி கமிஷன் பிரிவு, டினாநாத் , னுநிரவல னுசைநஉவழசஇ Pசுளுழு சுமித்குமார், ஆகியோர் கொண்ட குழு தஞ்சாவூர் மாவட்டத்தில் விவசாயிகள் பயிர் செய்யப்பட்டுள்ள நிலங்களில் நேரடியாக சென்று பார்வையிட்டும், விவசாயிகளிடம் கலந்துரையாடல் செய்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தனர்.

தஞ்சாவூர் மாவட்டத்திற்கு வருகை புரிந்த வறட்சியால் பாதிக்கப்பட்ட பயிர் சேதங்களை பார்வையிட வந்த மத்தியக்குழு கோயில்பத்து, புதுப்பட்டிணம், மேலஉளுர், சொக்கனாவூர் ஆகிய இடங்களில் விவசாயிகள் பயிர் செய்யப்பட்டுள்ள பயிர்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதை ஆய்வு செய்த போது உடன் செய்தியாளர்களையும் அழைத்து சென்று காண்பிக்கப்பட்டது.

இந்த ஆய்வில் பாராளுமன்ற உறுப்பினர் கு.பரசுராமன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெ.மகேஷ், இ.கா.ப., மாவட்ட வருவாய் அலுவலர் பெ.சந்திரசேகரன், வருவாய் கோட்டாட்சியர்கள் சுரேஷ் (தஞ்சாவூர்), ம.கோவிந்தராசு (பட்டுக்கோட்டை), வேளாண்மைத்துறை இணை இயக்குநர் கிருஷ்ணகுமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) சொக்கலிங்கம், வட்டாட்சியர்கள் குருமூர்த்தி, கஜேந்திரன், ரவிச்சந்திரன் மற்றும் விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்