தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய வாக்காளர் தினம்: கலெக்டர் எம்.ரவி குமார் பங்கேற்பு

புதன்கிழமை, 25 ஜனவரி 2017      தூத்துக்குடி
national voters day tuty

தூத்துக்குடி.

 

தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய வாக்காளர் தினம் நிகழ்ச்சி காமாராஜ் கல்லூரி வளாகத்தில் கலெக்டர் எம்.ரவி குமார் தலைமையில் நடைபெற்றது.

 

இந்நிகழ்ச்சியில் புதிதாக வாக்காளர்களாக சேர்க்கப்பட்ட கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு வண்ண வாக்காளர் அடையாள அட்டையினை வழங்கி தலைமையுரையாற்றும் போது கலெக்டர் எம்.ரவி குமார் தெரிவித்தாவது:

 

ஓவ்வொரு ஆண்டும் ஜனவரி 25ம் நாள் தேசிய வாக்காளர் தினமாக கொண்டாடப்படுகிறது. அனைவரும் வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தை விளக்கும் வகையில் வாக்காளர் விழிப்புணர்வு குறித்த பேரணிகள், மாணவர்களுக்கிடையே பேச்சு, கட்டுரை, கவிதை மற்றும் ஒவியம் போன்ற போட்டிகள் நடத்தப்படுகின்றன. கலைநிகழ்ச்சிகள் மூலமாகவும் மக்களுக்கு எடுத்துரைக்கப்படுகின்றன. ஆண், பெண், படித்தவர், படிக்காதவர், ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடுகள் எதுவும் இன்றி 18 வயது நிரம்பிய அனைவருக்கும் சமமாக வாக்குரிமை வழங்கப்படுகிறது. இளைஞர்களின் கையில் தான் நாட்டின் எதிர்காலம் இருக்கிறது. எனவே, தகுதி வாய்ந்த அனைத்து இளைஞர்களையும் வாக்காளர்களாக ஆக்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என தெரிவித்தார்.

 

வாக்காளர் தின உறுதிமொழி,பேரணி

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு கலெக்டர் எம்.ரவி குமார் முன்னிலையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள் உறுதிமொழியினை எடுத்தனர். முன்னதாக வ.உ.சி கல்லூரி வளாகத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற வாக்காளர் விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

 

வாக்காளர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் பேச்சு, கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது.

 

இந்நிகழ்ச்சியில் சார் ஆட்சியர் தீபக்ஜேக்கப்ப, வட்டாட்சியர்கள் சங்கரநாரயணன், இராமகிருஷ்ணன் (தேர்தல்), செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஜெகவீரபாண்டியன், வ.உ.சி.கல்லூரி முதல்வர் வீரபாகு, காமராஜ் கல்லூரி முதல்வர் .நாகராஜன் உட்பட பள்ளி மாணவ, மாணவியர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்: