திருநெல்வேலி அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் சாலை பாதுகாப்பு வார நிறைவு விழா காவல் துறை ஆணையாளர் திருஞானம் பங்கேற்பு

புதன்கிழமை, 25 ஜனவரி 2017      திருநெல்வேலி
pro nellai

திருநெல்வேலி,

 

திருநெல்வேலி அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் கே.டி.சி.நகரில் உள்ள கூட்டாண்மை அலுவலக வளாகத்தில் 28ஆவது சாலை பாதுகாப்பு வார நிறைவு விழா சிறப்புடன் நடைபெற்றது. இவ்விழாவில் திருநெல்வேலி மண்டல பொதுமேலாளர் பி.குமார் வரவேற்புரை ஆற்றினார். அரசு போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் மே.பாலகிருஷ்ணசாமி முன்னிலையுரை நிகழ்த்திட, சிறப்புரையாக திருநெல்வேலி காவல்துறை ஆணையாளர் சு.திருஞானம் விபத்தில்லாமல் பேருந்தை இயக்கிய 20 ஓட்டுநர்களுக்கும் திருநெல்வேலி, தென்காசி, சேரன்மகாதேவி கல்வி மாவட்டங்களைச் சார்ந்த பள்ளிகளில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு தொடர்பான ஓவியப்போட்டி, கட்டுரைபோட்டி, பேச்சுபோட்டிகளில் வெற்றி பெற்ற 27 மாணவ, மாணவியர்களுக்கும் மற்றும் சாலை போக்குவரத்து நிறுவனத்தை சார்ந்த 9 மாணவர்களுக்கு நற்சான்றிதழ் மற்றும் நினைவுப்பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினார். மேலும் இந்நிகழ்ச்சியில் காவல்துறை உதவி ஆணையாளர் விஜயகுமார், வட்டார போக்குவரத்து அலுவலர் திரு,கு.தங்கவேலு, இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் தலைவர் மருத்துவர்.சார்லஸ் பிரேம்குமார், கல்விதுறை ஒருங்கிணைப்பாளர் கஜேந்திரபாபு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். விழாவில் துணைமேலாளர் (பணி மற்றும் பயிற்சி) கொ.சமுத்திரம் நன்றியுரை ஆற்றினார். இவ்விழாவில் தூத்துக்குடி மண்டல பொது மேலாளர் டி.ஜி.ராஜேந்திரன், நிதி ஆலோசகர் இரா.முனியப்பன் துணை மேலாளர்கள் காளிச்சாமி, கண்ணன், ஜெபராஜ் நவமணி, மாணிக்கம், சிவசுப்பிரமணி, டேனியல் சாலமன், உதவி மேலாளர்கள் சுப்பிரமணி, சசிகுமார், சுடலைமணி, சிவன்பிள்ளை மற்றும் ஓட்டுநர்கள், நடத்துனர்கள் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்: