முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் பன்னீர்செல்வத்துடன் சரத்குமார் சந்திப்பு: ஜல்லிக்கட்டு அவசர சட்டத்திற்கு வரவேற்பு

புதன்கிழமை, 25 ஜனவரி 2017      அரசியல்
Image Unavailable

சென்னை, சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துடன் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், சந்தித்து பேசினார், அப்போது ஜல்லிக்கட்டு அவசர சட்டத்தை வரவேற்றார்.

முதல்வர் ஒ.பன்னீர்செல்வத்தை சென்னை தலைமைசெயலகத்தில் சமத்துவ மக்கள் கட்சித்தலைவரும் நடிகருமான சரத்குமார் நேற்று சந்தித்து பேசினார், இதன் பின்னர் நிருபர்களுக்கு சரத்குமார் அளித்த பேட்டி: முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றவுடன் முதல்முறையாக மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினேன். ஜல்லிக்கட்டு நடத்த முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நடவடிக்கை மேற்கொண்டு அவசர சட்டம் கொண்டுவந்தற்கு நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்து கொண்டேன். 50 ஆண்டுகளுக்கு பிறகு மாணவர்கள் செய்த புரட்சியின் காரணமாக ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கிடைத்துள்ளது.

அமெரிக்காவில் நடைபெறும் ரோடியோ எனும் விளையாட்டில் காளை மீது ஒருவர் எவ்வளவு நேரம் அமர்வாரோ அவர் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார். இந்த விளையாட்டை பீட்டாவால் தடைசெய்ய முடியவில்லை. இதே போன்று பூனை, நாய்களுக்கு அடைக்கலம் தருவதாக கூறும் பீட்டா 15 நாட்களுக்கு வைத்திருந்து பின்னர் அவற்றை  கொன்று விடுவதாக தகவல்கள் கிடைத்திருக்கின்றன. ஆகவே இந்த அமைப்பை தடை செய்ய வேண்டியது அரசின் கடமை. என்றார்.. மேலும் அரசு பிராணிகள் நல அமைப்பு வைத்திருக்கும் போது பீட்டா போன்றவை தேவையற்றவை என்றார், மேலும் நடிகர்கள் பீட்டா அமைப்பில் இடம் பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருப்பதாக நிருபர் ஒருவர் கேட்டபோது, பீட்டா அமைப்பில் நடிகர், நடிகையர்கள் யாரும் நடிகர் சங்கத்தலைவரே கூறி விட்டார் என்று சரத்குமார் பதிலளித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்