முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாக்காளர்களிடையே விழிப்புணர்வு பிரச்சாரம் மதுரை கலெக்டருக்கு தேசிய விருது

புதன்கிழமை, 25 ஜனவரி 2017      மதுரை
Image Unavailable

 மதுரை தமிழகத்தில் நடைபெற்று முடிந்த 2016 சட்டமன்ற பொதுத்தேர்தலில் வாக்காளர்களிடையே சிறப்பான முறையில் விழிப்புணர்வு பிரச்சாரம்(ளுறநநி) செய்தமைக்காக மதுரை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர்  கொ.வீர ராகவ ராவ்  மேதகு குடியரசுத்தலைவர் அவர்கள்  புதுடெல்லியில் நடைபெற்ற விழாவில், இந்திய தேர்தல் ஆணையத்தால் வழங்கப்படும் தேசிய விருதினை வழங்கினார்.
 இந்திய தேர்தல் ஆணையத்தின் மூலம் தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் கடந்த 16.05.2016 அன்று பொதுத்தேர்தல் நடத்தப்பட்டது. சட்டமன்ற பொதுத்தேர்தல் தொடர்பாக வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும்பொருட்டு, தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள்முதல் வாக்குப்பதிவு நாள்வரை பல்வேறு வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டது.

இதில் வாக்காளர் கையெழுத்து இயக்கம், வாக்களிப்பதன் அவசியம் குறித்து சைக்கிள் பேரணி, மினி மாரத்தான், மகளிர் சுயஉதவிக்குழு மூலம் அனைத்து ஊராட்சிகளிலும் கோலப்போட்டி, வருவாய்த்துறை அலுவலர்கள் பங்கேற்ற மனித சங்கிலி, வாக்காளர்களுக்கு கடிதம் அனுப்பும் நிகழ்ச்சி, வாக்களிப்பதன் அவசியம் குறித்து பெண்கள் அனைவரும் தங்கள் கையில் மெஹந்தியிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்திய நிகழ்ச்சி, மோட்டார் சைக்கிள் பேரணி, மலையேறுதல் நிகழ்ச்சி, 1500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பங்கேற்ற மாபெரும் விழிப்புணர்வு மனித சங்கிலி, மூன்று சக்கர வாகன (ஷேர் ஆட்டோ) பேரணி, பலூன் பறக்கவிடுதல் போன்ற நிகழ்ச்சிகளிலும்,
 இந்திய தேர்தல் வரலாற்றில் முதன்முறையாக வாக்காளர் விழிப்புணர்வு அஞ்சல்தலை வெளியிடுதல், விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய தொப்பிகள், கைப்பைகள், பனியன்கள், உறுதிமொழி ஓலை மற்றும் துண்டு பிரசுரம் வழங்குதல், மணல் சிற்ப கண்காட்சி, 100 சதவிகித வாக்குப்பதிவு குறித்து கல்லூரி மாணவிகள் பங்கேற்ற மே-16 மாதிரி வடிவம், வாக்காளர் விழிப்புணர்வு காப்பு, ஒட்டுவில்லை, ஸ்லோகம், ரசீதுகளில் விழிப்புணர்வு முத்திரை பதித்தல், நடமாடும் மாதிரி வாக்குச்சாவடி, வாக்காளர் உறுதிமொழி ஏற்பு போன்ற நிகழ்ச்சிகளில் சிறப்பாக செயல்பட்டதற்காக இந்திய தேர்தல் ஆணையத்தால் வழங்கப்படும் தேசிய விருதினை மாவட்ட ஆட்சித்தலைவர்   மேதகு குடியரசுத்தலைவர் அவர்கள் வழங்கினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago