முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஞ்சிபுரத்தில் பெண் சிசு கொலையை தடுக்க விழிப்புணா்வு பேரணி

புதன்கிழமை, 25 ஜனவரி 2017      சென்னை
Image Unavailable

காஞ்சிபுரத்தில் தேசிய பெண் குழந்தைகள் தினம் ஜனவரி 24ம் தேதி கொண்டாடப்படுவதையெட்டி பெண் சிசு கொலையை தடுக்க விழிப்புணா்வு பேரணி காஞ்சிபுரம் தாலுக்கா அலுவலகம் எதிரில் நடைப்பெற்றது.இதில்அன்புமணி செல்வக்குமார் தலைமை
தாங்கினார்.பெண்களுடைய எண்ணிக்கை குறைந்து வருவதால் தற்போது 20 வாரம் வரை மட்டுமே சில காரணங்களுக்காக கருகலைப்பு செய்யலாம் என சட்டம் உள்ளது.இந்த சட்டத்தை 26 வாரமாக மாற்றி சட்டம் இயற்ற இருப்பதாக அறிந்த நாங்கள் இச்சட்டத்தை உடனடியாக தடைசெய்ய வேண்டும் என்றும் 5 கோடி ஆண்களுக்கு எதிர்காலத்தில் பெண்கள் கிடைப்பது அரிதாகும்.பெண் குழந்தைகளை வெறுக்க காரணம் வரதச்சணை.ஆண்குழந்தை தான் குடும்பத்தின் வாரிசு என்ற நிலை உள்ளது.பெண்களால் காலம் முழுவதும் சம்பாதித்து பெற்றோர்களை காக்க முடியாது.என்ற எண்ணத்தில் தான் பெண் கருகலைப்பு அதிகமாக நடைப்பெறுகிறது என்று கூறினார்கள்.பெண் சிசுவை காப்பாற்றுங்கள்.பெண் இனத்தை காப்பாற்றுங்கள் என கோஷாங்கள் ஏழுப்பபட்டன.இதில் வையாவூர் சுபாசு சந்திபோஸ்.கோ.திருமாதாசன்.காரை.அருளானந்தம் உட்பட  50க்கும் மேற்பட மாணவிகள் பெண்கள் கலந்துகொண்டனா்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்