7வது தேசிய வாக்காளர் தினம் பெருநகர சென்னை மாநகராட்சியில் நடைபெற்றது

புதன்கிழமை, 25 ஜனவரி 2017      சென்னை

பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாக அம்மா மாளிகையில்   தேசிய வாக்காளர் தின நிகழ்ச்சி நடைபெற்றது.
வாக்களிப்பதன் அவசியம் குறித்தும், வாக்காளர்களாக தங்களது பெயர்களை பதிவு செய்வதன் அவசியம் குறித்தும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக  2011ம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் ஜனவரி 25ம் நாள் தேசிய வாக்காளர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.  அதனடிப்படையில், இன்று 7வது தேசிய வாக்காளர் தினம் பெருநகர சென்னை மாநகராட்சியில் நடைபெற்றது. இந்திய தலைமை தேர்தல் ஆணையாளர் .நஜீம் சைதி  தேசிய வாக்காளர் தின செய்தி காணொலி காட்சியின் மூலமாக ஒளிபரப்பப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் .ப.மகேஸ்வரி, தேசிய வாக்காளர் தின உறுதிமொழியினை வாசிக்க அனைவரும் உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டனர்
.
பெருநகர சென்னை மாநகராட்சியில் 01.01.2017யை தகுதியேற்படுத்தும் நாளாக கொண்டு தயாரிக்கப்பட்டு 05.01.2017 அன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலின்படி, புதியதாக 82,666 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.  அவர்களுக்கு வண்ண வாக்காளர் அடையாள அட்டைகளை வழங்கும் பணி துவங்கப்பட்டுள்ளது.  அதனடிப்படையில், 6 வாக்காளர்களுக்கு வண்ண வாக்காளர் அடையாள அட்டையினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் ஆணையாளர் (பொ) திரு.க.சு.கந்தசாமி கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் துணை ஆணையாளர் (கல்வி) மா.கோவிந்த ராவ், வழங்கினார்கள்.தேசிய வாக்காளர் தின உரையினை கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் துணை ஆணையாளர் (வருவாய் (ம) நிதி) வெ.அன்புச்செல்வன்  வழங்கினார்.பின்பு பள்ளி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்ட கலைநிகழ்ச்சிகள் மற்றும் பேச்சுப்போட்டி நடத்தப்பட்டு அவர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது.  இந்நிகழ்ச்சியில் உதவி ஆணையாளர் (பொ.நி.ம.ப.)கஸ்தூரி , மாவட்ட வருவாய் அலுவலர் (தேர்தல்) கே.ரமேஷ், கல்வி அலுவலர் ரஞ்சனி அவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவியர்கள் திரளாக கலந்து கொண்டனர்
.

மதுரை ரிங்ரோட்டுக்காக இருபோக சாகுபடி நிலங்களை அழிக்கத் துடிக்கும் தேசிய நெடுஞ்சாலைத் துறை

Aval Ladoo Recipes in Tamil | அவல் லட்டு | Sweets Recipe in Tamil

Star Hotel Chicken Shami Kabab Recipe in Tamil | சிக்கன் ஷாமி கபாப் | Chicken Recipes

Star Hotel Coriander Chicken Recipe in Tamil| | கொத்தமல்லி சிக்கன்| Kothamalli Chicken | Chicken Recipe

Fish Manchurian recipe in Tami l மீன் மஞ்சுரியன் l How to make fish manchrian in Tamil|Fish Recipes

Madurai Special Kari Dosa Recipe in Tamil | மதுரை மட்டன் கறி தோசை | Mutton Kari Dosa | Keema Dosa

இதை ஷேர் செய்திடுங்கள்: