முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குமாரபாளையம் நகராட்சியில் ரூ.3.00 கோடி மதிப்பீட்டில் 14 புதிய சாலை மேம்பாட்டுப்பணிகள் துவக்கம்:அமைச்சர் பி.தங்கமணி தொடங்கி வைத்தார்.

புதன்கிழமை, 25 ஜனவரி 2017      நாமக்கல்
Image Unavailable

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் சட்டமன்றத்தொகுதிக்குட்பட்ட குமாரபாளையம் நகராட்சியில் தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் புதிய சாலை மேம்பாட்டுப்பணிகள்  துவக்க விழாவும், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கட்டி முடிக்கப்பட்ட சுகாதார வளாகம் திறப்பு விழாவும்  நடைபெற்றது. இவ்விழாக்களுக்கு திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் ஜி.மகாத்மா அவர்கள் தலைமை வகித்தார். இவ்விழாக்களுக்கு குமாரபாளையம் நகராட்சி ஆணையாளர் ரா. மகேஸ்வரி, நகராட்சிப் பொறியாளர் வி.சச்சிதானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இவ்விழாக்களில்  மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வுத்துறை அமைச்சர் பி.தங்கமணி அவர்கள் கலந்து கொண்டு புதிய சாலை மேம்பாட்டுப்பணிகளை தொடங்கி வைத்து, கட்டி முடிக்கப்பட்ட பொது சுகாதார வளாகத்தினை திறந்து வைத்தார். நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் சட்டமன்றத்தொகுதிக்குட்பட்ட குமாரபாளையம் நகராட்சியில் தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ரிலையன்ஸ் பங்க் ரோடு, மணிமேகலை தெருவிலும், பள்ளிபாளையம் ரோடு ஐய்யன்தோட்டம் வட்டாட்சியர் அலுவலக சாலை, சேலம் மெயின்ரோடு சுந்தரம் காலனி சாலை, சுந்தரம் காலனி மேல்நிலைப்பள்ளி ரோடு, பாலிக்காடு சந்திப்பு, மேல்;நிலைப் பள்ளி ரோடு, சிங்காரம் செட்டியார் சாலை, சேலம் மெயின்ரோடு வழியாக சரஸ்வதி தியேட்டர் சாலை, ராகவேந்திரா பள்ளி அருகில் உள்ள சாலை, கிழக்கு சந்தைப்பேட்டை கே.பி.பங்களா அருகில் உள்ள சாலை, சந்தைப்பேட்டை பகுதி அலுவலகம் வழியாக எடப்பாடி ரோடு, தலைமை நீரேற்று நிலையம் எதிர்ப்புறச்சாலை, காவேரி நகர் வழியாக ஐய்யப்பா பள்ளி சாலை, எடப்பாடி ரோடு வழியாக செல்லவேல் மண்டபம் ரோடு, ராஜராஜன் நகர் சாலை, எடப்பாடி ரோடு அரசு மருத்துவமனை தண்ணீர் தொட்டி எதிர்ப்புற ரோடு, சித்தி விநாயகர் மண்டபம் அருகில் உள்ள சாலை ஆகிய பகுதிகளில் ரூ.3.00 கோடி மதிப்பீட்டிலான பல்வேறு சாலை மேம்பாட்டுப் பணிகளை  மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வுத்துறை அமைச்சர் பி.தங்கமணி அவர்கள் தொடங்கி வைத்தார்.அதனைத்தொடர்ந்து தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரூ.20.00 இலட்சம் மதிப்பீட்டில் குமாரபாளையம் நகராட்சி வார்டு எண்-33க்குட்பட்ட அங்காளம்மன் கோவில் பின்புறம் கட்டி முடிக்கப்பட்ட பொது சுகாதார வளாகத்தினை  மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வுத்துறை அமைச்சர் பி.தங்கமணி திறந்து வைத்தார்.இந்நிகழ்ச்சியில் குமாரபாளையம் வருவாய் வட்டாட்சியர் ரகுநாதன், மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தலைவர் டி.கே.சுப்பிரமணியம், டி.சி.எம்.எஸ். தலைவர் பி.என்.கந்தசாமி, குமாரபாளையம் நகர கூட்டுறவு வங்கி தலைவர் ஏ.கே.நாகராஜன், குமாரபாளையம் நகர்மன்ற முன்னால் துணைத்தலைவர் கே.எஸ்.எம்.பாலசுப்பிரமணியம்,பள்ளிபாளையம் நகராட்சி உதவிப்பொறியாளர் ஏ.வி.ரேணுகா, துப்புறவு அலுவலர் இராமமூர்த்தி, பணி மேற்பார்வையாளர் பி.சந்தோஷ், குமாரபாளையம் நகர்மன்ற முன்னால் வார்டு  உறுப்பினர்கள் உட்பட கூட்டுறவாளர்கள், நகராட்சிப்பணியாளர்கள் அரசுத்துறை அலுவலர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்